அருவி

நீரில் விளையாடி இளைப்பாறும் யானை மந்தையைப் போல்
காட்சி அளிக்கும் ஈரமான கரிய பெரிய பாறைகள்;
மரகதம் மற்றும் பச்சை மாணிக்க கற்களால் அமைத்த தடுப்புகள் போல்
இரு மருங்கிலும் மிடுக்காய் செழித்து உயர்ந்த பச்சை மரங்கள்;
வெற்றிவாகை சூடிய மன்னனுக்கு மக்கள் ஆரவாரிக்கும் ஒலியைப்  போல்
காற்றில் நிறைந்து ஒலித்த நீர் விழும் இனிய இரைச்சல்;
வீர மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தெளித்த பன்னீர் போல் 
நெருங்குபவரை வரவேற்க எட்டுத் திசையும் சிதறித் தெளித்த நீர்த் துளிகள்;
விண் மீன்களை உருக்கி வானிலிருந்து ஊற்றிய வெள்ளிக் குழம்பைப் போல்
மலை உச்சியிலிருந்து வெண் புகை எழுப்பித் துள்ளி வீழும் அருவி!

4 கருத்துகள்:

  1. //விண் மீன்களை உருக்கி வானிலிருந்து ஊற்றிய வெள்ளிக் குழம்பைப் போல்
    மலை உச்சியிலிருந்து வெண் புகை எழுப்பித் துள்ளி வீழும் அருவி//

    அற்புதமான கற்பனை கிரேஸ்

    பதிலளிநீக்கு
  2. சென்ற ஆண்டு போய்
    ரசித்து வந்த குற்றால அருவியை
    அப்படியே கண்முன் நிறுத்திப் போனது
    தங்க்கள் கவிதை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி திரு.ரமணி! மிக்க நன்றி! தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...