மலைச்சிகரத்திலிருந்து வாழ்த்தி வழியனுப்பினாள் இயற்கை அன்னை
சலசலத்து துள்ளிப் பாய்ந்தே ஓடுகிறேன் என் மணாளனைக் காண
இருமருங்கிலும் பச்சைப்பசேலென்ற மரங்கள் வாழ்த்துச்சொல்லி நின்றன
மலர்சொரிந்தும் இலை தூவியும் மணமகளான என்னை வாழ்த்திச் சிலிர்த்தன
அவற்றை வாரி எடுத்துக்கொண்டு உவகையுடன் ஓடுகிறேன்
விரைவாக ஓடி களைப்படையாதே என்றுசில பாறைகள் தடுத்தன
அருகிருந்த நிலத்தோழியோ விரைவாக மணாளனைச் சென்று சேரென்று
பாறைக்குப்பின்னே குனிந்து என்னை குதித்தோடச் செய்தாள்
தொலைவில் வரும் என்னைக் காண சிலமரங்கள் தலையை நீட்டிப்பார்த்தன
இன்னும் சிலவோ காலைமட்டும் ஊன்றி முழுதாகச் சாய்ந்து பார்த்தன
என்னையும் ஒளிவீசிய என்னில் தங்கள் பிரதிபலிப்பையும் பார்த்து மகிழ்ந்தன
நாணலும் சிறிய பூஞ்செடிகளும் மெதுவாக என்னைத் தொட்டுப் பார்த்தன
மகிழ்ந்து வாழ்கவென்றே நறுவீ மணம்பரப்பி தலையாட்டிச் சிரித்தன
அகமலிஉவகையுடன் வெண்தலைப் பெருங்கடல் மணாளனை அடைகிறேன்
"வருக என் உயிரே", எனப்பெரிதுவந்து அவர் வரவேற்க இரண்டறக் கலக்கிறேன்
Wow!!..enna oru karppanai Grace :)..wonderful..easily one of ur best !!
பதிலளிநீக்குஅகமலிஉவகையுடன் ஆறு பேசுவது அருமை ..!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்கு