விடுமுறை ஆரம்பித்தபொழுது, சில மாதங்களுக்கு முன் தமிழ் எழுத்துகளை அட்டையில் எழுதி வெட்டிக்கொண்டு தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தினேன். சிறியவனுக்கு எழுத்துகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினேன். தெரிந்த சில எழுத்துகளை வைத்து சொற்கள் என்று படிப்படியாக முன்னேறுகிறோம். ஆமை மாதிரி மெதுவாக இருக்கிறதே என்றும் நினைப்பதுண்டு. எனது 5, 9 வயதுகளில் எவ்வளவு தெரிந்தது என்று எனக்கு நினைவில்லை..ஆனால் பெரியவர்களாகும் பொழுது என்னை மாதிரி வாசிக்கவும் எழுதவும் வைத்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். கீழே இருப்பது இன்று என் இளைய மகனின் பயிற்சி.
நான் சொல்லும் வார்த்தையை எழுதி அதற்கு ஏற்றவாறு படமும் வரையச்சொன்னேன். வயிற்றில் 'square'வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அதனால் கட்டத்தை அவன் அப்பாவின் வயிற்றில் வரைந்திருக்கிறான். :)
இங்கு இடையில் குறும்பு, தானாக ஆங்கிலத்தில் ஏதோ எழுதுவதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டான்.
good .
பதிலளிநீக்குEniya vaalththu.
Vetha.Elangathilakam
நன்றி சகோதரி
நீக்குகுறுக்கெழுத்துபோட்டிபோல் இருக்கிறதே.... குழந்தைகளின் மூளை வளச்சிக்கு இதுவும் நன்றே...
பதிலளிநீக்குகுறுக்கெழுத்துப் போட்டி இல்லை சகோ, ஒரு எழுத்திற்கான ஒரே அட்டையைப் பயன்படுத்த அபப்டி வைத்தோம்..குறுக்கெழுத்துப் போல் அமைந்துவிட்டது. அதுவும் செய்ய ஐடியா வந்துவிட்டது :)
நீக்குநன்றி சகோ
நல்ல யோசனை தான். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி உமையாள்.
நீக்குதமிழைப் பயிற்றுவித்தல் - இனிமை..
பதிலளிநீக்குஅதிலும் சித்திரத்துடன் கூடிய செயல்முறை அழகாக இருக்கின்றது. வாழ்க நலம்..
அருமை மிக அருமை!..
பதிலளிநீக்குகற்கும் மகனையும் கற்பிக்கும் அன்னையையும்
மனக்கண்ணில் காட்சியாகக் கண்டு மகிழ்ந்தேன்!
மழலையர் உலகம் மகத்தானது. குறும்பினை வெகுவாக ரசித்தேன்!
சிறந்த முயற்சி!
உங்கள் கனவுகள் பலிக்க வாழ்த்துகிறேன் தோழி!
மிக்க நன்றி தோழி..
நீக்குஇளையவன் ரொம்பக் குறும்புதான் :)
அடடே..கிரேட் மென் மட்டுமல்ல கிரேட் உமனும் திங்க் அலைக்!
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதலான தொடக்கநிலை வகுப்புகளில் எழுத்துகளைக் கற்பிக்கும் முறையே அட்டைகள் தாம்! புத்தகம் அப்பறம்தான்...
அந்த அட்டைகளையே வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாமேம்மா? (சென்னையில் மட்டுமல்ல.. பெங்களுருவிலும் கிடைக்குமே? இல்லா்விட்டால் நான் வாங்கி அனுப்பட்டுமா?)
பள்ளிகளில் அட்டைகள் கொண்டு கற்பிப்பது மகிழ்ச்சி அண்ணா. அட்டைகள் கடைகளில் கிடைக்கிறதா? தெரியாமல் இருந்தேன்...இங்கு வாங்கிக் கொள்கிறேன், இங்கு கிடைக்கவில்லையென்றால் அப்பா அடுத்த வாரம் வருகிறார்கள், அவர்களிடம் சொல்கிறேன். மிக்க நன்றி அண்ணா.
நீக்குஅட்டகாசம்! நல்ல காரியம்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி! இளைய மகன் வரைந்த சொற்களுக்கு ஏற்ற படங்கள் - மனிதன் தனது எண்ணங்களை முதன்முதல் ஓவியமாக வெளிப்படுத்திய அந்த வரலாற்றுக் காலத்து பாறை ஓவியங்களை நினைவுபடுத்தின.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
த.ம.3
அட ஆமாம் அப்படித்தானே இருக்கின்றது :)
நீக்குநன்றி ஐயா
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
முன்பு உள்ள கல்வி புத்தகத்துடன் .இருந்தத இப்போது உள்ள கல்வி முறைமை தேடலுடன் உள்ளது.. தங்களின் முற்யசிக்கும் குழந்தையின் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.
நீக்குநன்றி
அருமையான முயற்சி சகோதரியாரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
அட அபாரம் போங்க.. கலக்குறாங்க குட்டீஸ்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி..
நீக்குபெரியவனின் தமிழ் பாடம் சற்று தடைபட்டிருக்கிறது.. :(
கவலை வேண்டாம் கிரேஸ் :) பாருங்க. தமிழ் மட்டும் அவன் ஓர் அளவுக்கு படிக்க கத்துகிட்டனா.. அவனே புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பச்சுடுவான்.. அவன் தான் self learning ல புலி ஆச்சே :)
நீக்குசிறந்த வழிகாட்டல் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
நன்றி ஐயா. போட்டி தகவலுக்கு நன்றி, பார்க்கிறேன் ஐயா.
நீக்கும்ம் நல்ல முயற்சி சகோதரி. தொடருங்கள் , நாளை உங்களைப் போன்று வர வேண்டும் அல்லவா !! சிறிய இடைவெளி, இனி வழக்கம் போல் தொடருவேன் ..
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குஅருமையாக கற்கிறீர்கள்! கற்றுக்கொடுக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎப்போதுமே கண்ணால் பார்த்து, செய்முறையில் படிப்பது மிகவும் மனதில் ஆழ பதியும் ஒரு முறையாகும்....இது போன்ற பயிற்சிகள் மிகவும் நன்மை பயப்பவையே! நல்ல முயற்சி!
பதிலளிநீக்குஆமாம் செயல்வழி கல்வி எப்பொழுதும் நன்று.
நீக்குநன்றி ஐயா
கிரேஸ்: உங்க குழந்தைகள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். உங்களைப்போல் ஒரு "தமிழ் அம்மா" (தமிழ்ப் பற்றுள்ள அம்மா), "இன்றைய நவநாகரிக" உலகில் கிடைப்பது அரிது.
பதிலளிநீக்குநன்றி வருண்.
நீக்குநானும் அதிர்ஷ்டசாலியே, நான் சொல்வதைக் கேட்டுப் படிக்கிறார்களே.. :)
கிரேஸ்! இந்த நிலவன் அண்ணாவும், வருணும் எப்பவுமே முந்திரிகொட்டை மாதிரி முந்திக்குவாங்க:(( நானும் அதையே வழிமொழிகிறேன்:))
பதிலளிநீக்குஅழகான முயற்சி கிரேஸ்!!
அவங்க முந்தினாலும் உங்கள் கருத்தும் என் மனதிற்கு மகிழ்ச்சி தருவதில் முதல் தான் தோழி. :)
நீக்குநன்றி டியர்
நல்ல முயற்சிம்மா பிள்ளைகளை கவரும் முறையில் கற்பிப்பது அவசியம். புரியுதோ இல்லையோ நாம் மனப்பாடம் பண்ணியே கற்றோம். வெளி நாடுகளில் அப்படி இல்லை விளையாட்டு மூலமே விளங்கி படிப்பது போலவே எதையும் பின் பற்றுவார்கள். அவர்களும் படிக்கிறோம் என்ற பளு தெரியாமலே இலகுவாக கற்றுக் கொள்வார்கள். தொடருங்கள் தோழி வாழ்த்துக்கள் ...! குழந்தைகள் உங்களை போலவே அசத்தப் போகிறார்கள் எனக்கு இப்பவே தெரிகிறது.
பதிலளிநீக்குஆமா வலைசரத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்து கதை போலவே கொண்டு சென்றிருந்தேனே. தொடர முடியவில்லையா தோழி. அல்லது போர் அடித்துவிட்டேனா. பார்க்க வேண்டியவர்கள் பலர் பார்வை இடவில்லை என நினைக்கிறேன்.
நன்றி இனியா..
நீக்குநீங்கள் வலைச்சரம் எழுதிய வாரம் எனக்கு மிகவும் மன உளைச்சலும் வேலையும் மிகுந்த வாரம்..என்னை அறிமுகம் செய்ததை தாமதமாகவே பார்த்தேன், இருந்தாலும் ஓடோடி வந்துவிட்டேன் ஆலயத்திற்கு :)
உங்கள் தளத்திலும் ஒரு பதிவைப் பார்த்தேன்..இப்பொழுது மீண்டும் வலைப்பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் தோழி, கண்டிப்பாக உங்கள் அனைத்துப் பதிவுகளையும் பார்க்கிறேன்..போர் கண்டிப்பாக இல்லை, சுவாரசியமாகவே இருந்தது...என் நேரமின்மையால்தான் அனைத்தையும் தொடர இயலவில்லை தோழி..
பயனுள்ள பதிவு. அனைவரும் இதனை முயற்சிக்கலாம். நன்றி.
பதிலளிநீக்கு