திகட்டும் தித்திக்கும் வகையான இனிப்புகளே
திகட்டாத் தித்திப்பு எம் தமிழன்றோ
திருநாள் இன்பமா தமிழ் தரும் இன்பம்
ஒருநாளும் குறையா நிலையான இன்பமன்றோ
எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ
எம்மொழிப் புத்தகங்கள் தேடித் படித்தாலும்
எம்மொழி தமிழ் படிக்க உள்ளம் ஏங்குமன்றோ
அன்பு நிறைந்த பிற மொழி உரையாடலினும்
என் உள்ளம் உகளுவது தமிழ்ப் பேச்சன்றோ
எங்கு சுற்றினும் தாய் சேரும் சேய் போல்
எம்மொழி கற்றினும் உணர்வு நாடுவது தமிழன்றோ
திகட்டாத் தித்திப்பு எம் தமிழன்றோ
திருநாள் இன்பமா தமிழ் தரும் இன்பம்
ஒருநாளும் குறையா நிலையான இன்பமன்றோ
எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ
எம்மொழிப் புத்தகங்கள் தேடித் படித்தாலும்
எம்மொழி தமிழ் படிக்க உள்ளம் ஏங்குமன்றோ
அன்பு நிறைந்த பிற மொழி உரையாடலினும்
என் உள்ளம் உகளுவது தமிழ்ப் பேச்சன்றோ
எங்கு சுற்றினும் தாய் சேரும் சேய் போல்
எம்மொழி கற்றினும் உணர்வு நாடுவது தமிழன்றோ
படிக்க படிக்க உள்ளமும் ஏங்குகிறது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்!
நீக்குஉண்மை உண்மை... முற்றிலும் உண்மை.
பதிலளிநீக்கு//எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ// - அருமையான வரிகள்
மிக்க நன்றி ஸ்ரீனி!
நீக்குயாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதான தொரு மொழி
பதிலளிநீக்குஉண்டோ சொல் என்பது போல் தமிழைப் போற்றும் வகையில் வரைந்த கவிதை அழகு !வாழ்த்துக்கள் சகோ .
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும், வாழ்த்தும் கருத்திற்கு நன்றியும் அம்பாளடியாள்!
நீக்குதமிழைத் தவிர்த்து வேறெதில்
பதிலளிநீக்குஇனிமை இன்பம் பெறுவது...
மனங்கவர்ந்த வரிகள்! இனிமை!
வாழ்த்துக்கள் தோழி!
வேறேதும் இல்லை தோழி!
நீக்குஉளமார்ந்த நன்றி!
இன்பத் தமிழ் நம் உயிருக்கு நேர் அல்லவா
பதிலளிநீக்குஉண்மை! உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயக்குமார்!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
கவிதைப்போட்டிக்கான சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.. என்பதை அறியத் தருகிறேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்,
நீக்குஉங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!
சான்றிதழுக்கும் நன்றி, கிடைத்தவுடன் தெரியப்படுத்துகிறேன்!
அருமை கிரேஸ்..... பாராட்டுகள்.
பதிலளிநீக்குத.ம. 4
மிக்க நன்றி வெங்கட்.
நீக்குTamilmanam +1
பதிலளிநீக்குநன்றி நம்பள்கி!
நீக்குமனம் பேசும் மொழியே என்றும் மாறாத மொழி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலியபெருமாள்!
நீக்குதமிழ் பற்றி பேசும் கவிதைகள் தித்திப்பு ... வாழ்த்துக்கள் சகோதரி..
பதிலளிநீக்குநன்றி மது!
நீக்குயாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் # பாரதி ........................அருமை ...அருமை
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி மைதிலி!
நீக்குநம்மைச் சுற்றி எத்தனை மொழிகள் இறைந்துகிடக்கின்றன. எதையும் கவனியாத மனம் ஒற்றை வார்த்தை தமிழில் கேட்டாலும் உற்சாகத்துடன் அலைபாய்ந்து உடையவரைத் தேடுகிறது. நீங்க தமிழா என்று கேட்கும்போதே கண்ணில் தெரியும் மின்னல்... சொல்ல முடியாத சுகம். கவிதை அருமை. பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மைதான். கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஆம் தமிழ்த்தேன் பருக பருக திகட்டாத இன்பம் அளிப்பது. அமுதினும் மேலான தமிழின் பெருமையை அனைவரும் உணர்ந்து இதன் பெருமை சிறிதும் குறையாது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கையில் இப்பொழுது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். அழகான கவிவரிகள். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி
வணக்கம் சகோ. நீங்கள் சொல்வது உண்மைதான், அதைச் சரிவர நாம் செய்ய வேண்டும். கருத்திற்கு மிக்க நன்றி!
நீக்குஅருமை, அருமை, மிக்க நன்றி Grace. மற்ற மொழி பேசுவோர் அனைவரும் இப்படித்தான் நினைபர்களா?
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
நீக்குமற்ற மொழி பேசுவோரும் தம் தாய்மொழி பற்றி இப்படி நினைக்கலாம்..தமிழ் கற்கும் பிறமொழி பேசுவோரில் சிலரும் இப்படி உணர்கின்றனர் ..