ஐங்குறுநூறு 12
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"கரை சேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்ல என் தட மென் தோளே"
எளிய உரை: கரையில் வளரும் நாணல் கரும்பைப் போல வளரும் அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை பொறுக்க முடியவில்லை எனக்கு. என் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை.
விளக்கம்: நீர்நிலைகளின் கரையில் நாணல் செடிகள் கரும்பைப் போல வளர்ந்திருக்கும் ஊரைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தலைவி தலைவனுடைய அக்கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறாள் தோழியிடம். தன் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை என்றும் சொல்கிறாள்.
சொற்பொருள்: கரை சேர் வேழம் - கரையில் வளரும் நாணல் செடி, கரும்பில் பூக்கும் - கரும்பைப் போல வளரும், துறை கேழ் ஊரன் - அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நன்றும் ஆற்றுக தில்லை யாமே - கொடுமையை பொறுக்கமுடியவில்லை நானே, தோற்கதில்ல என் தட மென் தோளே - தோற்பதில்லை என் வளைந்த மெல்லிய தோளே
என் பாடல்:
கரும்பைப் போல நாணல் வளர்ந்திருக்கும்
அழகிய ஊரைச் சேர்ந்தவன் கொடுமை
பொறுக்க முடியவில்லை எனக்கு
தோற்றுப் போவதில்லை வளைந்த என் மெல்லிய தோளே
அருமையாகத் தெளிவாக
பதிலளிநீக்குபொருள் நயம் மேலும் சிறக்க
கவியாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி ரமணி ஐயா.
நீக்குநல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முனைவரே!
நீக்குவிளக்கம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவிளக்கமும் அழகாக உள்ளது, உங்கள் கவிதையும் சிறப்பாக உள்ளது... வாழ்த்துகள், பாராட்டுகள்...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வெற்றிவேல்.
நீக்குவெகு சிறப்புங்க. இது போன்ற பகிர்வுகள் நிறைய வேண்டும். மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க சசிகலா.
நீக்குமெல்லிய நாணல் முற்றி கரும்பு போல் வளரும்போது நாணலென மெலிந்த தன் தோள்கள் மட்டும் வலிவற்றுத் தோற்றுப்போகுமோ? எந்நாளும் தோற்காது என்று கூறுகிறாளோ தலைவி? அழகான பொருட்செறிவு மிக்கப் பாடலைப் பகிர்ந்து விளக்கம் அறியத் தந்தமைக்கு நன்றி கிரேஸ்.
பதிலளிநீக்குநல்ல விளக்கம் கீதமஞ்சரி. தலைவனுடைய கொடுமையைப் பொறுக்கமுடியவில்லை எனினும் தன் தோள்கள் தோற்றுப் போகாது என்றும் கொள்ளலாம்.
நீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி!
அழகான பாடல் மற்றும் விளக்கமும் கிரேஸ்
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் அக்கா....
பதிலளிநீக்குதன் மெல்லிய தோள்கள் அவள் தோற்பதில்லை என கூறுவது, தலைவன் கண்டிப்பாக திரும்பி தன்னை மகிழ்விப்பான் எனவும் கொள்ளலாமா? அக்கா...
வார்பிலக்கியம் இன்னும் மேம்பட வேண்டும் என நினைக்கிறேன் அக்கா...
பாராட்டுகள், தொடருங்கள்...
நன்றி வெற்றிவேல்..வார்பிலக்கியம் கருத்தில் கொள்கிறேன்..பாடலில் உள்ளதை மட்டும் அப்படியே சொல்லலாம் என்று நினைத்ததால்...
நீக்குநீங்கள சொல்வது போலவும் கொள்ளலாம்...