தலைவன் தலைவியிடம் திருமணம் செய்து எப்பொழுதும் இணைந்து வாழ்வதாக வாக்கு அளிக்கிறான். ஆனால் அதை நிறைவேற்றாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். தலைவிக்கோ ஏக்கமும் வருத்தமும். தலைவி வருந்துவதைப் பார்த்தால் தோழி வருந்தாமல் இருப்பாளா? நல்ல தோழி அவள். வருந்தியத் தோழி தலைவனிடம் அவனுடைய வாக்கை அழகாக நினைவூட்டி அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்கிறாள். சினம்தானே வரும், எப்படி அழகாகச் சொல்வது என்று யோசிக்கிறீர்களா? தேன் தமிழில் தேனைப் போலவே பேச முடியும் என்று சொல்லும் ஒரு சங்க இலக்கிய ஐங்குறுநூற்றுப் பாடலைப் பாருங்கள்.
ஐங்குறுநூறு 8, பாடியவர் ஓரம்போகியார்.
மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக என வேட்டோமே"
எளிய உரை: வாழ்க ஆதன், வாழ்க அவினி. அரசு முறையாக ஆட்சி செய்க.
விளக்கம்: சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. தலைவனுடைய ஊரின் அழகையும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி. தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாகத் தலைவன் உரைத்த வாக்கையே தோழி குறிப்பிடுகிறாள். மாமரம், மயில், பூக்கள் ஆகியவை கருப்பொருள்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, அரசு முறை செய்க - அரசு முறையாய் ஆட்சி செய்க, களவு இல் ஆகுக - களவு இல்லாமல் ஆகுக, என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய், யாமே – நான், அலங்கு சினை - அசையும் கிளை, மாஅத்து – மாமரம், அணி மயில் இருக்கும் - அழகிய மயில் அமர்ந்திருக்கும், பூக்கஞல் ஊரன் சூள் - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு, இவண் வாய்ப்பதாக - இங்கு நிறைவேறட்டும், என வேட்டேமே - என விரும்புகிறேன்
என் கவிதை:
பூக்கள் நிறைந்த ஊரில்
தென்றலில் அசையும் மாமரத்தில்
மயில் அமர்ந்திருக்க
மாமரத்தின் அடியில் நான் அமர்ந்து
காட்சியை ரசிக்க என்று வேட்டேமே
ஐங்குறுநூறு தொடரும்...

களவு இல்லாமல் ஆகவேண்டும் என்று
விரும்புகிறாள் தாய். மாமரத்தின்
அசையும் கிளைகளில் அழகான மயில் அமர்ந்திருக்கும்
பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு இங்கு நிறைவேற வேண்டும் என்று
விரும்புகிறேன் நான்.
விளக்கம்: சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. தலைவனுடைய ஊரின் அழகையும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி. தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாகத் தலைவன் உரைத்த வாக்கையே தோழி குறிப்பிடுகிறாள். மாமரம், மயில், பூக்கள் ஆகியவை கருப்பொருள்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, அரசு முறை செய்க - அரசு முறையாய் ஆட்சி செய்க, களவு இல் ஆகுக - களவு இல்லாமல் ஆகுக, என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய், யாமே – நான், அலங்கு சினை - அசையும் கிளை, மாஅத்து – மாமரம், அணி மயில் இருக்கும் - அழகிய மயில் அமர்ந்திருக்கும், பூக்கஞல் ஊரன் சூள் - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு, இவண் வாய்ப்பதாக - இங்கு நிறைவேறட்டும், என வேட்டேமே - என விரும்புகிறேன்
என் கவிதை:
பூக்கள் நிறைந்த ஊரில்
தென்றலில் அசையும் மாமரத்தில்
மயில் அமர்ந்திருக்க
மாமரத்தின் அடியில் நான் அமர்ந்து
காட்சியை ரசிக்க என்று வேட்டேமே
ஐங்குறுநூறு தொடரும்...
விளக்கம், சொற்பொருள் அருமை...
பதிலளிநீக்குகவிதைக்கு வாழ்த்துக்கள்...
பதிவும், தங்கள் கவிதையும் அருமை கிரேஸ். தொடருங்கள் :)
பதிலளிநீக்குதொடர்ந்து கருத்துரைத்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் நன்றிபல திரு.திண்டுக்கல் தனபாலன்!
பதிலளிநீக்குவிளக்கவுரையும் கவிதையும் அழகு தொடரட்டும் இலக்கிய பகிர்வு!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனிமரம் அவர்களே.
பதிலளிநீக்குவிளக்கம் அருமை பாராட்டுக்கள் சகோதரி
பதிலளிநீக்குநன்றி விமல்!
பதிலளிநீக்குவிளக்கமும் பாடலும் அருமை கிரேஸ்.. உன் கவிதை அழகு!!!
பதிலளிநீக்கு