சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 1

சங்க இலக்கியம் என்பது நம் முன்னோர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு.  பாண்டிய மன்னர்கள் தமிழை ஆதரிக்கவும் காக்கவும் சங்கம் அமைத்து புலவர்களை ஆதரித்து உள்ளனர். மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன.

முதற்சங்கம் இருந்தது - கடல்கொண்ட மதுரையில்
இடைச்சங்கம் இருந்தது - கபாடபுரத்தில் 
கடைச்சங்கம் இருந்தது  - இன்றைய மதுரையில்

இந்த மூன்று சங்கங்கள் பற்றிப் பல்வேறு செய்திகள் இருந்தாலும் மதுரையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்ந்து வளர்த்ததை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் இருக்கும் குறிப்புகள் கொண்டு அறியலாம்.

"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் 
மகிழ்நனை மறுகின் மதுரை"
இது சிறுபாணாற்றுப்படை எனும் பத்துப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும்  பெருமை தாங்கி நிற்கும் பழமையான மகிழ்ச்சி தோன்றுகின்ற தெருக்களையும் உடைய மதுரை மாநகரம் என்பது இந்த அடிகளின் பொருள்.
சொற்பொருள்: மறுகு - தெரு

"தொல்லாணை நல்லாசிரியர் 
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் .."
என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க நூல்களாகும். இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களையும் சில வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்தால் சிலப் பாடல்கள் முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று எண்ண வைக்கின்றன.

சங்க இலக்கியங்களைப் படிக்கும் பொழுது நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சிறப்புடன் இருக்கும் இன்மொழி என்று இறுமாப்பு வருகிறது. அதே நேரத்தில் இழந்த சில செல்வங்களை நினைத்து வருத்தமும் வருகிறது. இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்.


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய செய்திகள் அடுத்த சங்க இலக்கிய அறிமுகப் பதிவில் பார்ப்போம். நன்றி!



19 கருத்துகள்:

  1. அருமையான பதிவு கிரேஸ். அடுத்து வரும் பதிவுகளைப் படிக்க ஆவல் கூடுகிறது. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி :)

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக இளைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுப்பது நமது தலையாய கடமையும் கூட...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எனது பாணியில் ஒரு பகிர்வு : படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... இருந்தாலும் Link : http://dindiguldhanabalan.blogspot.com/2012/10/Top-Ten-First-Ten.html

    பதிலளிநீக்கு
  4. ந‌ல்ல‌தொரு அறிமுக‌ம் தோழி.. வாழ்த்துக‌ள்!!! தெரிந்த‌ ம‌ற‌ந்த‌ த‌க‌வ‌ல்க‌ள்.. தொட‌ரு..ஆவ‌லுட‌ன் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்ரீனி!
    நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
    நன்றி தியானா!

    பதிலளிநீக்கு
  6. @திண்டுக்கல் தனபாலன் : முதுமொழிக்காஞ்சி பற்றிய அருமையான பதிவு..நன்றி

    பதிலளிநீக்கு
  7. இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்.// வாழ்த்துக்கள் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. @கவியாழி கண்ணதாசன்: வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு துவக்கம்.முயற்சி
    தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
    ஆர்வமாக உள்ளேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. @ரமணி: மிக்க நன்றி திரு.ரமணி அவர்களே! என் பதிவுகளைத் தொடர்வதாகச் சொன்னதற்கும் வாழ்த்துக்கும் நன்றிபல!

    பதிலளிநீக்கு
  11. சங்கம் என்பது தமிழ் பெயரா?

    பதிலளிநீக்கு
  12. @ராபின்: சங்கம் என்பது வடமொழிச் சொல் என்று கருதப்படுகிறது. தமிழ் மன்றம், தமிழ் குழுமம் என்று அழைக்கப்பட்டதாக வாசித்தேன். கடைச்சங்க காலத்தில் இருந்தே வடமொழிச் சொற்கள் கலக்க ஆரம்பித்து சங்கம் என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறது. இப்படி வடமொழிச் சொற்களை அறிந்து அவற்றின் இடத்தில் தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்..கேள்விக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. தமிழராய்ப் பிறந்த அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு. தமிழின் இனிமையும் பெருமையும் பறைசாற்றும் சங்க இலக்கியங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆவலாய்க் காத்திருக்கிறேன். அன்பான பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  14. ஏகப்பட்ட இடையூறுகளால் உங்களை முறையே தொடரமுடியாமல் போனது தோழி! விடுபட்டவற்றை படித்து கருத்திடுவேன் விரைவில்.

    இதுவும் மிக நல்ல தொரு ஆரம்பமே. தொடருங்கள் தொடர்வேன்...
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  15. @கீதமஞ்சரி: உங்கள் ஆவலினால் ஊக்கப்படுத்துகிறீர்கள். பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதமஞ்சரி!

    பதிலளிநீக்கு
  16. @இளமதி: பரவாயில்லை தோழி, நேரம் கிடைக்கும்பொழுது படியுங்கள். உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். உங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிபல.

    பதிலளிநீக்கு
  17. ''..இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்...''
    மிக்க நன்றி. தொடர்
    இனிதாக அமைய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் இணையதளத்திற்கு எனது பாராட்டுகள், உங்களை போன்ற இணையதளத்தின் சேவை தமிழுக்கு தற்போது தேவை, இந்நிலையில் நான் ஒன்றை குறிப்பிட்டு கூற ஆசை படுகிறேன். சங்க
    இலக்கியங்களின் அறிய தொகுப்புகளை http://www.valaitamil.com/literature என்ற இணையதளம் தொகுத்து வைத்துள்ளது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி parhti zplus. சங்க இலக்கியம் பற்றிய ஒரு தள அறிமுகத்திற்கும் நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...