ஐங்குறுநூறு 15 - ஊரன் அல்லனே செயலால்

ஐங்குறுநூறு 15, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப்
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே"


எளிய உரை: நீர் நிறைந்து மணல்  கரைகளில் ஓடும் ஆற்றில் சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து விளையாடும் பெண்களை விரும்பி அவர்களுக்கு மிதவைப்போல உதவும் நாணல் வளரும் ஊரைச்சேர்ந்தவன் இவ்வூரைச் சேர்ந்தவன் ஆயினும் இவ்வூரைச் சேர்ந்தவன் இல்லையே.

விளக்கம்: வேழத்தால் ஆன மிதவைகளை ஆற்றில் விளையாடும் பெண்கள் பயன்படுத்துவர். அது அப்பெண்களுக்கு உதவுவதைப்போலத் தலைவனும் அவர்களுக்கு உதவி செய்வதாக அவர்களுடன் விளையாடுகிறான். தலைவன் பரத்தைப் பெண்களுடன் தொடர்பு கொண்டதால் வருந்திய தலைவி அவனை நம்புவதில் பயனில்லை என்று பொருள்படத் தோழியிடம் வருந்துகிறாள். என் தலைவன் ஆனாலும் பரத்தைப் பெண்களுடன் சென்று விட்டானே..அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெதும்புகிறாள்.

சொற்பொருள்: மணல் ஆடு - மணற்கரைகளில் ஓடும், மலிர் நிறை - நிறைந்த ஆறு, விரும்பிய - விருப்பப்பட்ட,  ஒண் தழைப் புனல் ஆடு மகளிற்கு - சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து ஆற்றில் விளையாடும் பெண்களுக்கு, புணர் துணை உதவும் - மிதக்கும் நாணல் போல உதவும், வேழ - கரும்பு, மூதூர் ஊரன் - பழமையான ஊரைச் சேர்ந்தவன், ஊரன் ஆயினும் - ஊரைச் சேர்ந்தவன் ஆயினும், ஊரன் அல்லனே - என் ஊரைச் சேர்ந்தவன் இல்லையே 

என் பாடல்:
கரை புரண்டு ஓடும் ஆற்றில் விளையாடும் 
இலையுடை அணிந்த பெண்களை விரும்பி
நாணல் மிதவைப் போல உடன் ஆடும் தலைவன்
இந்த ஊரைச் சேர்ந்தவன் ஆயினும்  செயலால்
இந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை தோழி!

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்!

      நீக்கு
  2. அருமையான விளக்கமும், பாடலும் :)

    பதிலளிநீக்கு
  3. அழகிய பாடல்..... உங்கள் கவிதையும் அருமை!

    வாழ்த்துகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  4. அகத்திணைப் பாடல்களின் உவமை நலம் எப்பொழுதுமே அருமையாக ிருக்கும்.விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அருமையான பாடலுக்கு அழகான விளக்கமும் இறுதியில் வடித்த கவிதையும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்சி .மகிழ்வாக உள்ளது.எளிமையான கவிதை சங்க இலக்கியத்தை அனைவரும் படிக்கத்தோன்றும் படி உள்ளது தோழி.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் மனமார்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி கீதா. ஆமாம், நம் இலக்கியத்தை அனைவரும் படித்து அறிய வேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி தோழி!

      நீக்கு
  7. இலக்கியம் தந்த இனிமையும் உங்கள் பாடலும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சகோதரிக்கு வணக்கங்கள்.
    தமிழ் இலக்கியங்களில் இல்லாத தகவல்களா! அதும் அக இலக்கியங்கள் சொல்ல வேண்டாம். தங்களின் கவிதையும் அருமை சகோதரி. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாண்டியன்! ஆமாம், நம் இலக்கியத்தில் இல்லாத அகமா? புறமா?
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரரே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...