"சாதிகள் இல்லையடி பாப்பா!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறை உடையவர்கள் மேலோர்"
என்று பாடிச் சென்றாய் பாரதி
நூற்றாண்டானாலும் மாறவில்லை அந்நியதி
பாப்பா என்று குறிப்பிட்டதால்
பாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ
பாப்பா மனதிலும் பதிய விடவில்லையே
பசுமரத்து ஆணியாய் நிலைக்கவிடவில்லையே
பாவம் என்று சொன்னாய் பாரதி
பாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே
நீதி மதி கல்வி இவையெல்லாம்
பணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே
கற்கும் நல்வழி எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம்
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
எமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறை உடையவர்கள் மேலோர்"
என்று பாடிச் சென்றாய் பாரதி
நூற்றாண்டானாலும் மாறவில்லை அந்நியதி
பாப்பா என்று குறிப்பிட்டதால்
பாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ
பாப்பா மனதிலும் பதிய விடவில்லையே
பசுமரத்து ஆணியாய் நிலைக்கவிடவில்லையே
பாவம் என்று சொன்னாய் பாரதி
பாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே
நீதி மதி கல்வி இவையெல்லாம்
பணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே
கற்கும் நல்வழி எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம்
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
எமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
பாரதி சொன்னாலும் அதைப் படித்தாலும் கொஞ்ச நாள் மறந்தாலும் மீண்டும் வருவது தேர்தலே அதனால் மீண்டுமீண்டும் வருவது சாதியுந்தான்
பதிலளிநீக்குநடக்கும் சம்பவங்கள் பார்த்தால் யாருக்கும்... நெஞ்சு பொறுக்குதில்லையே...
பதிலளிநீக்குஎன்றும் குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா...?
சாதிகள் இல்லையடி பாப்பா
பதிலளிநீக்குஎன்ற பாரதி கண்ட சமுதாயம்
என்று அமையுமோ?
சரியாக சொன்னீர்கள் கிரேஸ். சாதியின் பெயரால் தான் எவ்வளவு பிரச்சனை.
பதிலளிநீக்கு"அறியாமை" என்பது காலங்காலமா இருந்துகொண்டேதான் இருக்கு, இருக்கும். ஒரு முட்டாள் செத்தால், இன்னொரு முட்டாள் பொறக்கத்தான் செய்றான். "காதலின்" சிறப்பம்சமே, மத, சாதி, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒண்ணு அது என்பதே. அறியாமையில் வாழும், சாதிவெறியில் அலையும் காட்டுமிராண்டிகளுக்கு அந்த "உணர்வை"ப் புரிந்து கொள்ள முடியாது.
பதிலளிநீக்குநாடுவிட்டு நாடு குடியேறினால், அல்லது போய் வாழ்ந்தால், சாதி என்பது நாமாக உருவாக்கி, நாமே கட்டி அழும் ஒரு அர்த்தமற்றது என்பது விளங்கும். ஆனால் அந்த வாய்ப்பெல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை! கிணற்றுத்தவளையாகவே பொறந்து, வாழ்ந்து, சாகிறவர்கள்தான் அதிகம். சாதியை கட்டி அழுதுகொண்டு, மனிதனை மனிதனாக, தன்னைப்போல் இன்னொரு தமிழரை, இன்னொரு மனிதரை, சமமாம நினைக்கத்தெரியாமல், அறியாமையில் வாழ்பர்கள்தான் நம்மில் பெரும்பான்மை என்று ஆகும்போது என்ன செய்வது?
சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்....
பதிலளிநீக்குகாலம் மாறினாலும் சாதிவெறியும் இனவெறியும் மதவெறியும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன பல அப்பாவி மனிதரைப் பழிவாங்கியபடியே..
பதிலளிநீக்குநெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடித்தான் நம்மை ஆற்றிக்கொள்ளவேண்டியுள்ளது.