ஐங்குறுநூறு 212 - சந்தனமும் அகிலும் சேர்ந்து மணக்கும்...

ஐங்குறுநூறு 212 பாடியவர் கபிலர் 
குறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.

"சாத்த மரத்த பூழில் எழு புகை 
கூட்டு விரை கமழும் நாடன் 
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்!"

எளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே?

விளக்கம்: தலைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.

சொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை -  கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே

6 கருத்துகள்:

  1. நல்லதொரு பாடல் கிரேஸ். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. பல புதிய சொற்களையும் தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  2. சொற்பொருள் விளக்கம் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு. எழுதுங்கள் நிறைய இது போல.
    செவிலித்தாயை பொதுவாக பாட்டுடைத்தலைவியின் வளர்ப்பு அம்மாவாக உருவகப்படுத்துவார்கள் தலைவிக்கு ஒரு சிறப்பை சேர்க்க. செவிலித்தாயின் மகளே தலைவியின் தோழியாக இருக்குமாறு பாடல்கள் ஏதும் உண்டா? அந்த அன்யோன்னியமான நெருக்கம் அந்த தோழியிடம் இருக்குமா என்ன?
    இதன் தொடர் பாடலாக செவிலித்தாயின் பதில் இருந்தால் இதிலே சேர்க்கலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செவிலித்தாயின் மகளே தலைவியின் தோழியாக இருக்குமாறு பாடல்கள் ஏதும் உண்டா?// - உறுதியாகத் தெரியவில்லை, அப்படியும் இருக்கலாமோ என்று ஒரு எண்ணம்..
      //இதன் தொடர் பாடலாக செவிலித்தாயின் பதில் இருந்தால் இதிலே சேர்க்கலாம் அல்லவா?// தொடர் பாடல் உள்ளதா என்று தெரியவில்லை..படித்தால் கண்டிப்பாகப் பகிர்கிறேன்.

      வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் நன்றி ராபர்ட்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...