ஐங்குறுநூறு 14 - தூங்குவதற்கு இனியதே

ஐங்குறுநூறு 14, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 


"கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே"

எளிய உரை: வரிசையாக மலர்ந்திருக்கும் நாணல் மலர்கள் அருகிலிருக்கும் சிறிய வடு மாங்காய்களைக் கொண்டிருக்கும் மாமரத்தின் காற்றிலாடும் தண்டுக்கிளைகளைத் தீண்டும். அத்தகைய அழகிய துறைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதே.

விளக்கம்: வடுமாங்காய்களைக் கொண்ட மாமரத்தின் மென்மையான கிளைகளை நாணல் செடிகளில் பூத்த மலர்கள் தீண்டியது போல தலைவனின் மார்பு மென்மையானதாகவும் குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் பல பெண்கள் அவனைத் தழுவுவதாக தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகின்றாள். நாணல் பரத்தைப் பெண்களைக் குறிக்கிறது.

சொற்பொருள்: கொடிப்பூ வேழம்  - வரிசையாக பூக்கள் பூத்த நாணல் செடிகள், தீண்டி - தொடும், அயல - அருகிலுள்ள, வடுக்கொண் மாஅத்து - வடு மாங்காய்களைக் கொண்ட மாமரம், வண் தளிர் - மெல்லியக் கிளைகள், நுடங்கும் - காற்றிலாடும், அணித்துரை ஊரன் மார்பே - அழகியத் துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பனித் துயில் செய்யும் - குழுமையாய்த்  துயில் கொள்ளும், இன் சாயற்றே - இனிமையானதே 

என் பாடல்: 
வரிசையாக பூத்த நாணல் மலர்கள் 
வடுமாங்காய்க்  கொண்ட மாமரத்தின் 
மெல்லியக் காற்றிலாடும் கிளைகளைத் தீண்டும் 
அழகிய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு 
குளுமையாய்த்  தூங்குவதற்கு  இனியதே 

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    சங்க இலக்கிய பாடல் பற்றிய விளக்கவுரை நன்று வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. எளிய உரையுடன் விளக்கமும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அற்புதமாக புதிய வடிவில்
    பொருள் சற்றும் மாறாது கொடுத்தவிதம்
    அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பாடல், அழகிய கவிதை... -சுவாரசியமான பதிவு

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான பதிவு. மிக்க நன்றி கிரேஸ் தங்கள் சேவைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! சேவை எல்லாம் இல்லை, நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..சங்க இலக்கியச் சுவை அறிய வேண்டும் அனைவரும்..அதுவே :)

      நீக்கு
  6. எளிய உரைகளுடன் கூறிய சிறப்பான விளக்கம்...

    வார்பிலக்கியம் சிறப்பாக உள்ளது...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...