Saturday, October 26, 2013

வானம் தாண்டியும்



கண் காணும் காட்சி
காப்பியமாகும்

காது கேட்கும் ஒலி
கானமாகும்

உள்ளம் உணரும்  உணர்வு
கவிதையாகும்

பார்ப்பதும் பார்க்காததும்
படைப்பாகும்

கட்டுப்பாடு ஏதுமில்லை
கவர்ந்த எதுவுமாகும்

பார் முழுவதும்
பாடு பொருளாகும்

வானம் தாண்டியும்
வரையில்லா எண்ணமாகும்

ஆழியின் ஆழத்தினும்
ஆக்கும் மனது ஆழமாகும்

இருப்பதிலும் இல்லாததிலும்
உரு அமைக்கும் கலையாகும்

பாரெங்கும் பரவும்
பல்வகை படைப்புக்களாகும்

புரிந்திடவும் ரசித்திடவும்
புவியோற்கு ரசமாகும்

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

26 comments:

  1. எல்லாம் நம் வசம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ராஜி, வருகைக்கு நன்றி!

      Delete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை நெருடியது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். மிக்க நன்றி!

      Delete
  3. அருமை...

    // உள்ளம் உணரும் உணர்வு
    கவிதையாகும்.. //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன்!

      Delete
  4. ada...


    azhakiya kavithai sako...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி!

      Delete
  5. ஆக்கும் மனதின் ஆழம் அதிகம்தான்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலியபெருமாள்!

      Delete
  6. படைத்திடும் அனைவருக்கும்
    படைப்பாற்றல் அனைத்துமாகும்//உண்மையே

    ReplyDelete
  7. அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  8. உங்கள் கற்பனை
    அழகிய கவியாகும் :)

    தினம் ஒரு அழகிய கவி தந்து அசத்துரிங்க கிரேஸ் .. என்றும் தொடரட்டும் :)

    ReplyDelete
  9. படைப்பாளிக்கு எல்லாமே பாடு பொருள்.... நல்ல விஷயம்....

    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள்...

    ReplyDelete
  10. யாதுமாகி நின்றாய் நீ கவிதையே !

    ReplyDelete
  11. மிகச் சரி
    அதற்கு தங்களைப் போல்
    பார்வையில் தெளிவும் கொடுக்கும் திறனும்
    உள்ளவர்களுக்த் தான் சாத்தியம்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அருமையாக படைக்கும் நீங்கள் இப்படி என்னைப் பாராட்டியது உங்கள் பெருந்தன்மையே, மிக்க நன்றி! உளமார்ந்த மகிழ்ச்சியுடன் நன்றி ரமணி ஐயா!

      Delete
  12. Replies
    1. மிக்க நன்றிங்க ஜெயக்குமார்!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...