உன்னிடம் வந்ததை

வானத்து நீலம்
வான் மிதக்கும் நிலா
குளிர்ந்த மோர்
குளிர்பனி மூட்டம்
இவையெனக்குப் பிடிக்குமா?
அறியேன் நான்
இவையெல்லாம் பிடிக்கும் என்றாய்
எனக்கும் என்றேன்
நொடி வீணடிக்காமல்
கேட்ட மனது அப்படியே செய்தது

என் புன்னகையும்
என் விழிகளும் 
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல் 
கண்களை சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறேன்
என்னை அறியாமல்
என்ன ஆயிற்று எனக்கென 
இதயத்தைக்  கேட்டால்
பதிலில்லை

உன்னிடம் வந்ததை 
உணர்ந்தாயா நீ?







31 கருத்துகள்:

  1. கவித.. கவித.. கலக்கல் கிரேஸ்..
    //இவையெனக்குப் பிடிக்குமா?
    அறியேன் நான்
    இவையெல்லாம் பிடிக்கும் என்றாய்
    எனக்கும் என்றேன்// --- சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. முந்திக் கொண்ட முல்லைப் பூவாசமும்
    தந்தி அடிக்கும் தளிர்விரல் தாளமுடன்
    வந்தாயே வண்ணமாய் இதழ் சிந்தி
    பிந்தாமல் பெருவிழி உருட்டலுடன்...

    இப்படி அங்கிருந்து செய்தியும் வந்ததா தோழி!..:)

    அருமை! உருக வைக்கும் உணர்வுக் கவிதை!
    வாழ்த்துக்கள்!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் அது? என் பாட்டிற்கு எசப்பாட்டுப் பாடுவது? :) :) என்று விளையாட்டாய் கேட்டாலும்,
      //முந்திக் கொண்ட முல்லைப் பூவாசமும்
      தந்தி அடிக்கும் தளிர்விரல் தாளமுடன்
      வந்தாயே வண்ணமாய் இதழ் சிந்தி
      பிந்தாமல் பெருவிழி உருட்டலுடன்...// அருமையோ அருமை இளமதி!
      தளிர்விரல் தாளம்- அழகு :) உங்கள் சொல்லாடல் மிக அருமை தோழி! மிகவே மகிழ்ந்தேன்!
      பாராட்டும், கூடுதலாய் இனியக் கவிதையும் -- உளமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  3. என்ன ஆயிற்று எனக்கென இதயத்தைக் கேட்டால் பதிலில்லை//வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கவியாழி ஐயா!

      நீக்கு

  4. உன்னிடம் வந்ததை
    உணர்ந்தாயா நீ?//

    இடம் மாறிவிட்ட இதயம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ரமணி ஐயா! உங்களின் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி பல!

      நீக்கு
  5. வணக்கம்
    கவிதையின் கற்பனை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்! உங்கள் இனிய வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!

      நீக்கு
  6. நேசத்தின் அழகான வெளிப்பாடு. மனத்துக்கினியவரின் விருப்பு வெறுப்புகளுக்கு முன் நம் விருப்பு வெறுப்புகள் மறைந்துபோவது உண்மையே. மிக அழகான கவிதை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, உங்கள் ஆழமான கருத்திற்கும் பாராட்டி வாழ்த்தி கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி!

      நீக்கு
  7. அறிவாயோ
    அன்புருவே
    அகமிருந்த இதயமது
    உன்னுள்
    உள்ளதாவென்று ......
    ==
    கேள்வியுடன் கூடிய அழகுக் கவிதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறிவாயோ
      அன்புருவே
      அகமிருந்த இதயமது
      உன்னுள்
      உள்ளதாவென்று ..// அருமை மகேந்திரன்! கவிதையுடன் கருத்தைச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி பல!

      நீக்கு
  8. அட... அருமை...

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதும் இனிதாய் கருத்திட்டுப் பாராட்டும் உங்களுக்கு உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  9. அருமை சகோ. காதலின் உணர்ச்சியை அப்படியே கவியாய் வடித்து விட்டது அழகு. //உன்னிடம் வந்ததை
    உணர்ந்தாயா நீ?// கேள்வியோடு முடிந்து பலரின் காதல் கற்பனைகளைத் தட்டி விட்டு போகும் வரிகளைத் தந்தமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாண்டியன்.

      நீக்கு
  10. கவிதையைப் படித்து கருத்திட்டு மட்டும் போக முடியவில்லை. தமிழ்மணம் வாக்கும் அளித்திருக்கிறேன். நன்றீங்க சகோதரி.

    பதிலளிநீக்கு
  11. என்ன ஆயிற்று என்று
    இதயத்தை திருடியவரிடம் அல்லவா கேட்க வேண்டும்... ?
    ரசிக்க வைத்த வரிகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் கவிதை... அருமை

    இளமையின் வசீகரம் வழிகிறது கவிதையில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் மனமார்ந்த கருத்திற்கும் மகிழ்ச்சிகலந்த நன்றி பல மது கஸ்தூரி ரங்கன்!

      நீக்கு
  13. இதயம் திருடியதாரோ...இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக...

    பதிலளிநீக்கு
  14. அட அட... அழகான கவிதை. மிகவும் பிடித்துள்ளது... சட்டின்னு அவர்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே... என்ன ஆயிற்று என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார கவிதை மிக பிடித்தது என்றதற்கு நன்றி வெற்றிவேல்! கேட்டுடலாம் :-)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...