வாழ்க்கையின் முக்கிய ஆதாரம்
வான் பொழியும் நீர்
எளிதாய்க் கிடைக்கும் சிலருக்கு
அரிதாய்க் கிடைக்கும் சிலருக்கு
தூய்மையாய்க் கிடைக்கும் சிலருக்கு
தூய்மையற்றதாய்க் கிடைக்கும் சிலருக்கு
அழுக்கு நீரால் நோய்கொண்டு போகும்
அழுக்கில்லா பால் உயிரும் உண்டு
தூய்மையாய்க் கிடைக்கும் சிலருக்கு
தூய்மையற்றதாய்க் கிடைக்கும் சிலருக்கு
அழுக்கு நீரால் நோய்கொண்டு போகும்
அழுக்கில்லா பால் உயிரும் உண்டு
கிடைக்காமலேயே போகும் உயிருமுண்டு
விடைகாணவே கடமை கொண்டுள்ளோம்
குளமும் ஏரியும் வற்ற
நிலத்தடி நீரும் சுண்ட
ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்களும் எங்ஙனம் தழைக்குமோ?
நினைக்கையில் அணுவும் அதிருதே
என்கையில் என்னவென்றே சிந்திக்குதே
சொட்டு நீரும் தேவையின்றிச் சொட்டக் கூடாதே
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நிலத்துக்கே
பல் விளக்கும் போது
பல்லிழிக்கும் குழாய் எதற்கு?
தலை தேய்க்கும் பொழுது
தானாய்க் கொட்டும் பீச்சுக்குழாய் எதற்கு?
நீர்பிடிப்பில் போடும் குப்பை
உயிர்பிடிப்பில் போடும் குப்பையன்றோ?
மரங்களை வெட்டுதல் நாளைய
தலைமுறையை வெட்டும் மூடமன்றோ?
உயிர்பிடிப்பில் போடும் குப்பையன்றோ?
மரங்களை வெட்டுதல் நாளைய
தலைமுறையை வெட்டும் மூடமன்றோ?
விரைவில் வளரும் மரங்கள் நட்டாலே
வரைவில் முகில்கள் முட்டுமே
நீர் வளம் பெருக்கினாலே
நில வளம் தானாய்ப் பெருகுமே
பங்களிப்பை நாம் உணர்ந்தாலே
பலவழியும் நமக்குப் புலப்படுமே
வரை - மலை
நீர் வளம் பெருக்கினாலே
நில வளம் தானாய்ப் பெருகுமே
பங்களிப்பை நாம் உணர்ந்தாலே
பலவழியும் நமக்குப் புலப்படுமே
வரை - மலை
மரங்களை வெட்டுதல் நாளைய
பதிலளிநீக்குதலைமுறையை வெட்டும் மூடமன்றோ?
அழகாகச் சொன்னீர்கள்.
சிந்திக்கவைக்கும் கவிதை.
மிக்க நன்றி முனைவரே!
நீக்குanroid not used √
பதிலளிநீக்குபுது அலைபேசியா?? மகிழ்ச்சி திரு.தனபாலன்!
நீக்குநன்றி!
√ √ √ √ √
பதிலளிநீக்குமரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை முன்னிருத்தி கவி புனைந்து தந்தமைக்கு நன்றி சகோ. அனைவரும் உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பாவித்தால் நாளைய தலைமுறைக்கு நல்லது. கவி வரிகள் அனைத்தும் அழகு. தொடர வாழ்த்துக்கள் சகோ..
பதிலளிநீக்குஒரு சொட்டு நீர் எங்காவது வீணாவது கண்டால் பொறுக்கவே முடியவில்லை சகோ!
நீக்குஉங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அற்புத கவிதை கிரேஸ் :).
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீனி!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குசமச்சீர் பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் ஒன்றிக்கு அருமையான அறிமுகம், தூண்டலை கொடுக்க கூடிய கவிதை ... கவிஞரே ... வாழ்த்துக்கள் பயன்படுத்திவிட்டு சொல்கிறேன்.
உங்கள் கருத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களுக்குப் பயன்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்? கண்டிப்பாகச் சொல்லுங்கள்...ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நீக்குநன்றி பல!
நீர்வளமும் அதன் சிறப்பையும்
பதிலளிநீக்குஅதை உணரவேண்டிய அவசியத்தையும்
மிக அழகாகக் கூறினீர்கள்..
அருமை உங்கள் கவி வரிகள்!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.4
உங்கள் வருகைகண்டு மகிழ்ந்து கருத்துரை கண்டு மேலும் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் தோழி!
நீக்கு//
பதிலளிநீக்கு//சொட்டு நீரும் தேவையின்றிச் சொட்டக் கூடாதே
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நிலத்துக்கே//
அருமை!
நன்றி ஜனா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇயற்கை வளம் பாதுகாப்பு பற்றி கவிதையில் சொல்லிய விதம் அருமை.... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! மிக்க நன்றி!
நீக்குநீரின்றி அமையாது உலகு
பதிலளிநீக்குஅருமையான கவிதை நன்றி
ஆம்! நன்றி ஜெயக்குமார்!
நீக்கு//நினைக்கையில் அணுவும் அதிருதே
பதிலளிநீக்குஎன்கையில் என்னவென்றே சிந்திக்குதே//
நல்ல சிந்தனை. தண்ணீருக்காகவே போர் புரியும் நாள் வந்தாலும் வரலாம்.....
மிக்க நன்றி வெங்கட்!
நீக்குஅப்படி ஒரு நாள் வராமல் போகட்டும்...
தவறு கண்டு பொங்குவதும் தார்மீகக் கோபம் கொள்வதும் ஒருவகையில் ஏற்புடையது என்றாலும் அத்தவறு நிகழாமல் தடுக்க நம்மால் என்ன செய்ய இயலும் என்று ஒவ்வொருவரும் தனித்து செயல்பட்டாலும் போதுமே... கூட்டுமுயற்சியால் நாட்டுவளம் பெருகுமே.. நன்மை பொலியுமே... அழகான சிந்தனை. பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குஉண்மைதான் கீதமஞ்சரி! நன்றி!
நீக்குநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ்மணம் பிளஸ் + 5 வோட்டு..
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி!
நீக்கு