கண் காணும் காட்சி
காப்பியமாகும்
காது கேட்கும் ஒலி
கானமாகும்
உள்ளம் உணரும் உணர்வு
கவிதையாகும்
பார்ப்பதும் பார்க்காததும்
படைப்பாகும்
கட்டுப்பாடு ஏதுமில்லை
கவர்ந்த எதுவுமாகும்
பார் முழுவதும்
பாடு பொருளாகும்
வானம் தாண்டியும்
வரையில்லா எண்ணமாகும்
ஆழியின் ஆழத்தினும்
ஆக்கும் மனது ஆழமாகும்
இருப்பதிலும் இல்லாததிலும்
உரு அமைக்கும் கலையாகும்
பாரெங்கும் பரவும்
பல்வகை படைப்புக்களாகும்
புரிந்திடவும் ரசித்திடவும்
புவியோற்கு ரசமாகும்
படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்
எல்லாம் நம் வசம்
பதிலளிநீக்குஆமாங்க ராஜி, வருகைக்கு நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் மனதை நெருடியது அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். மிக்க நன்றி!
நீக்குஅருமை...
பதிலளிநீக்கு// உள்ளம் உணரும் உணர்வு
கவிதையாகும்.. //
வாழ்த்துக்கள்...
ada...
பதிலளிநீக்குazhakiya kavithai sako...
மிக்க நன்றி சீனி!
நீக்குஆக்கும் மனதின் ஆழம் அதிகம்தான்.....
பதிலளிநீக்குநன்றி கலியபெருமாள்!
நீக்குபடைத்திடும் அனைவருக்கும்
பதிலளிநீக்குபடைப்பாற்றல் அனைத்துமாகும்//உண்மையே
நன்றி ஐயா!
நீக்குஅருமையான படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குஉங்கள் கற்பனை
பதிலளிநீக்குஅழகிய கவியாகும் :)
தினம் ஒரு அழகிய கவி தந்து அசத்துரிங்க கிரேஸ் .. என்றும் தொடரட்டும் :)
படைப்பாளிக்கு எல்லாமே பாடு பொருள்.... நல்ல விஷயம்....
பதிலளிநீக்குசிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள்...
யாதுமாகி நின்றாய் நீ கவிதையே !
பதிலளிநீக்குநன்றி ஸ்ரவாணி!
நீக்குமிகச் சரி
பதிலளிநீக்குஅதற்கு தங்களைப் போல்
பார்வையில் தெளிவும் கொடுக்கும் திறனும்
உள்ளவர்களுக்த் தான் சாத்தியம்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அருமையாக படைக்கும் நீங்கள் இப்படி என்னைப் பாராட்டியது உங்கள் பெருந்தன்மையே, மிக்க நன்றி! உளமார்ந்த மகிழ்ச்சியுடன் நன்றி ரமணி ஐயா!
நீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க ஜெயக்குமார்!
நீக்கு