உப்பிட்டவரை நினைப்பாய் உள்ளளவும் என்றே

அன்பே ஆருயிரே
இன்றுன் பிறந்தநாள்
என்ன கொடுக்கவென்றே
எண்ணிச் சென்றேன் கடைவீதி

பழங்களில் இனிப்பு
பதார்த்தத்தில் இனிப்பு
பவுனில் பரவசம்
பட்டில் பிரமாதம்

பாட்டிமொழி நினைவில் வந்தே
பாங்காய் வாங்கிவந்தேன் உப்பை
உப்பிட்டவரை நினைப்பாய்
உள்ளளவும் என்றே

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    நன்றி செய்தவரை நாம் கடசி வரை மறக்க கூடாது என்பதை அழக கவிதையில் சொல்லிய விதம் நன்று வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. என்ன வாங்கிட்டு போனிங்க.. உப்பா ?

    பதிலளிநீக்கு
  3. உப்பு போடாத ஜூஸ், காஃபி, டீ மட்டும் கொடுத்தனுப்பும் ஃப்ரெண்ட்ஸைலாம் மறந்துடலாமா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம்...அவர்களை எப்படி மறக்கமுடியும் ராஜி?
      உப்பு என்பது உணவைக் குறிக்கிறதோ..

      நீக்கு
  4. உப்பு என்பது ஒரு குறியீடுதானே
    அதையே வாங்கி வந்தால் எப்படி ?
    பாவம் குழந்தை
    வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர்கள் சொன்னதில் உப்பு என்பது உணவிற்கான குறியீடோ..
      நன்றி ரமணி ஐயா

      நீக்கு
  5. பிறந்த நாள் பரிசுக் கவிதை அற்புதம்!

    நல்லதொரு வித்தியாசமான கற்பனை...
    பார்த்து.. உப்பு இருக்கும்வரைதான் நினைக்கப் போகிறார்கள்...;)

    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.4

    பதிலளிநீக்கு
  6. அட.. இது நல்ல ஐடியா'வா இருக்கே.. என்னோடு அடுத்த பிறந்த நாள் பரிசு உப்பு தான்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றி ஸ்ரீனி, காப்பியில் உப்பு போட்ரவா? :)

      நீக்கு
    2. ஹா.ஹா.. நல்ல வேலை நான் காப்பி குடிக்கிரதை கம்மி பண்ணிட்டேன்.. சோ நான் எஸ்கேப் :)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...