சிறுவருக்கு விடுமுறை
பெற்றோருக்கு விடாவேலை
முழுநேரம் பார்க்கலாம் இனிமையே
சிலநேரம் வந்துவிடும் களைப்பே
வாண்டுகள் படை களிப்புற
வந்ததே பள்ளி விடுமுறை
குழுவாய் ஓடி வருவர்
குடிக்கத் தண்ணீர் கேட்பர்
யார் கேட்டார் யார் குடித்தார்
தெளிவாகத் தெரியாது
குவளை உருளும் தண்ணீர் சிதறும்
குழுவோ காணாமல் போகும்
சிறிது நேரத்தில் திரும்பும்
சிரித்து சாமானை இறைக்கும்
இதைக் கொடு அதைக் கொடு என்றே
பூசல் பூக்கும் கலகம் கனியும்
நொடிக்கொரு முறை அழைக்கும்
நாட்டாமைப் பண்ணச் சொல்லும்
தீனி ஏதேனும் கொடுத்தால்
தோதாய் வேறு கேட்கும்
சிறிது நேரத்தில் என் தலை சுற்றும்
செவியும் பாவம் கிழியும்
ஆனாலும் இவர் இல்லாவிட்டால்
மௌனம் மனதைப் பிசையும்
இடைநேரம் களைப்பென்றாலும் முழுநேரமும் இனிமைதான்.
பதிலளிநீக்குஅழகிய அருமையான வதைதான் இது...:)
ரசிக்கவைக்கும் குழந்தைக் கலைஞர்கள் அவர்கள்!
அருமை உங்கள் கவிவரிகள்! தொடர்ந்து ரசியுங்கள்...
வாழ்த்துகள்!
த ம.1
கண்டிப்பாக!
நீக்குஉங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி இளமதி!
ஆனாலும் மனம் முழுக்க சந்தோசம் இருக்கும்...
பதிலளிநீக்குஆமாம். உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி திரு.தனபாலன்!
நீக்குரொம்ப நல்லாயிருக்குங்க உங்க கவிதை, கிரேஸ்!
பதிலளிநீக்குஒரு பக்கம் நம்ம ஊரில் குழந்தை பெற முடியாத சிறு குறையுள்ளவர்கள் இக்கவிதையைப் படித்தால் அவர்கள் கண்களில் கண்ணீர் வரும்.
இன்னொரு பக்கம் அமெரிக்காவில் வாழும் இந்தக்காலத்து இளம் தம்பதிகள் எல்லாம் "குழந்தைகளால் வரும் இந்த அன்புத் தொல்லையெல்லாம் என்னால டீல் பண்ண முடியாது" னு உறுதியாக நம்பி மணம் முடிக்கும்போதே குழந்தை பெற ஆவல் இல்லாதவாராகப் பார்த்து மணம் முடித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
எல்லாருமே ஆறு அறிவு உள்ள மனிதர்கள்தான்.. அவரவர் வாழ்க்கை! அவரவர் சந்தோசம்! அவரவர் விருப்பம்!
நாம் யார் குழந்தை பெறமுடியாத இந்தியர்கள் அமெரிக்கர்களைப் பார்த்துக் கத்துக்கணும் என்றோ அல்லது குழந்தை வேண்டாம் என்று நம்பும் மேற்கத்தியர் எல்லாம் குழந்தைகள் எவ்வளவு அவசியம்னு இந்தியர்களைப் பார்த்து திருந்தணும்னு சொல்றதுக்கு?
எல்லாரும் சந்தோசமா இருந்தால் சரிதான். :)
உண்மை தான்..எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வருண்!
நீக்குவீடுகளில் குழந்தைகளின் இருப்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.....
பதிலளிநீக்குவீடுகளில் குழந்தைகள் இருந்தாலும் பிரச்சனை... இல்லையென்றாலும் பிரச்சனைதான்... அவர்கள் இல்லையென்று...
நன்றி சௌந்தர்! ஆமாம், இரண்டாவது பிரச்சினை மிகப்பெரிது.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமனதுக்கு சந்தோசமான பதிவு பதிவு அருமை வாழ்த்துக்கள்
என்னுடைய வலைத்தள முகவரி
https://2008rupan.wordpress.com
தொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். கண்டிப்பாக உங்கள் தளம் வருகிறேன், நன்றி!
நீக்கு//குழுவாய் ஓடி வருவர்
பதிலளிநீக்குகுடிக்கத் தண்ணீர் கேட்பர்
யார் கேட்டார் யார் குடித்தார்
தெளிவாகத் தெரியாது
குவளை உருளும் தண்ணீர் சிதறும்
குழுவோ காணாமல் போகும்
சிறிது நேரத்தில் திரும்பும்
சிரித்து சாமானை இறைக்கும்...//
ரசித்த வரிகள்!
தீனி ஏதேனும் கொடுத்தால்
தோதாய் வேறு கேட்கும்
ரசித்த வரிகளையும் தெரியப்படுத்தியதில் மகிழ்ச்சி!
நீக்குகருத்துரைத்தமைக்கு நன்றி ஜனா!
அழகாக சொல்லியிருக்கிறாய் கிரேஸ் !! முற்றிலும் உண்மை.. குழந்தைகள் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியுடன் வேலையும் அதிகம்.
பதிலளிநீக்குநன்றி தியானா!
நீக்குஆமாம், அதனுடன் எனக்கு ஒரு கவிதையும் கொடுத்துவிட்டார்கள் :)
குழந்தைகளின் உலகத்தை அழகாக உற்று நோக்கி கவிதையாய் வடித்த விதம் சிறப்பு. குழந்தைகள் இல்லா வீடு கடவுள் வாழா வீடே. பகிர்வுக்கு நன்றீங்க.
பதிலளிநீக்குரொம்ப நன்றிங்க பாண்டியன்!
நீக்குஎதார்த்தமான அழகிய கவிதை...
பதிலளிநீக்குநன்றி சீனி!
நீக்குஅழகு நடையில் அற்புதமான கவிதை கிரேஸ் ..
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி!
நீக்குஆனாலும் மகிழ்ச்சியாய் இருக்கும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
நீக்குகிரேஸ்! பெஸ்ட்;
பதிலளிநீக்குஉங்களுக்கு பிளஸ் 1 வோட்டு போட்டாச்சு!
மிக்க நன்றி நம்பள்கி அவர்களே!
நீக்குஆஹா! குழந்தைகளும், விடுமுறையும்! அப்படியே காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள், கிரேஸ்!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்!
மகிழ்ச்சி அம்மா, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
நீக்குஉண்மைதான்..சிறுவயது ஞாபகங்கள் கண்முன்னே நிழலாடுகிறது
பதிலளிநீக்குமகிழ்ச்சி, நன்றி கலியபெருமாள்!
நீக்குஆஹா! வெகு அருமை.
பதிலளிநீக்குவிடுமுறையில் வீட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆசிரியர்களுக்கு விடுமுறைகள் வெறுமையான நாட்கள். ;(
இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கிறது பாடசாலை ஆரம்பிக்க. வருவார்கள்... நிறையக் கதைகளோடு. ;) இரண்டு வாரத்தில் இரண்டு சென்டிமீட்டர், சிலர் இரண்டு அங்குலம் கூட வளர்ந்திருப்பார்கள். வியப்பாக இருக்கும்.
ஆசிரியர்களின் பார்வையிலிருந்து அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் இமா, நன்றி! குழந்தைகளின் கதைகளையும் வளர்ச்சியையும் பார்த்து மகிழும் உங்களுக்கு உளமார்ந்த நன்றி!
நீக்கு