இறகால் தூவுதல் போல


வாளிரண்டு மோதும் தீப்பொறி அன்ன
வானில் மின்னல் மின்னாமல்
வலிய பீரங்கியின் முழக்கம் அன்ன
வானில் இடியும் முழங்காமல்

இவ்விடம் செழிக்கப் பொழியவே
இணைந்து இசைந்த மேகங்கள்
இறகால் தூவுதல் போல
இனிய மழைப் பொழிந்தனவே!

தாய் நீராட்டும் இளந்தாய் போல
தென்னையும் பூரித்து நின்றதே
தன் பச்சைக் கரங்களில் ஏந்திய நீர்
தளிர் மேனியில் மென்மையாய் இறங்கியதே!



23 கருத்துகள்:

  1. ''..இறகால் தூவுதல் போல
    இனிய மழைப் பொழிந்தனவே!..''
    இனிய வரிகள்.
    இனிய வாழ்த்து.
    ஏனோ எனக்கு ஒலி வரவில்லை
    சிலவேளை எனது தொழில் நுட்பம் தவறியிருக்கலாம்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே!
      ஒலி வரவில்லையா, ஏனென்று தெரியவில்லையே, எனக்கு வருகிறது.. என்னவென்று பார்க்கிறேன். நன்றி!

      நீக்கு
  2. இறகால் தூவுதல் போல பொழிந்த மழை என் மேலும் வழிந்தது போல உணர வைத்தது உங்களின் இனிய கவிதை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் நன்றி மனோ சாமிநாதன் அவர்களே!

      நீக்கு
  3. இனிமையான கவிதை அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கவி நாகா!

      நீக்கு
  4. இனிய மழைப் பொழிவது காட்சியாக
    இதமான கற்பனைப் பொழிவு கவிதையாக

    சொட்டச் சொட்ட நனைந்தேன்!..:)
    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே சூடாக ஒரு இஞ்சி தேநீர் குடித்துவிடுங்கள் இளமதி :)
      உளமார்ந்த கருத்திற்கும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  5. காணொளியும் அதற்கான கவிதையும்
    இயற்கையின் இன்னிசையோடு
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!

      நீக்கு
  6. மென் தூறல் ரசிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. உலகின் அதிசயம் மழை...

    மழையின் அதிசயம் சாரல்...

    பதிலளிநீக்கு
  8. அட.. கலக்குரீங்க கிரேஸ் :)..
    புகைபடத்திலிருந்து, காணொளிக்கு மாறிட்டிங்க போல.. சூப்பர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை அமைதியாய் அழகாய்ப் பெய்து கொண்டிருந்தது, பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஆசை, அதான் :)
      நன்றி ஸ்ரீனி!

      நீக்கு
  9. ஜில்லிசையிலும் மெல்லிசையிலும் நனைந்தேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...