பிழை அதனைப் பொறுத்துப்
பிழைத்துப் போ என்றிடலாம்
தவறு அதனைத் தாங்கி
திருத்து என்றே உரைத்திடலாம்
ஆனால் இதனைக் கேட்பீர்
ஆன்றோரே
கடமை தவறிச் செய்யும்
மாயை
ஏமாற்றிச் சூழ்ச்சி செய்யும்
படிறு
நம்ப வைத்துப் பேசும்
நடலை
இச்சை வழியில் சொல்லும்
மிச்சை
வாய் கூசாமல் சொல்லும்
பொய்
இவற்றை
எந்த வடிவத்திலும்
எந்தச் சூழலிலும்
எந்தத் தன்மையிலும்
ஏற்கலாகுமோ?
பொறுத்தலாகுமோ?
இயலாது என்றே
இயம்பிடுவீரே!
மாயை, படிறு, நடலை, மிச்சை இவையெல்லாம் 'பொய்' என்பதன் வேறு பெயர்களாம். 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்ற சுஜாதா அவர்களின் நூலில் நான் படித்தச் சொற்கள் இவை.
புதிய சொற்களை அருமையான
பதிலளிநீக்குகவிமூலம் அறியத் தந்தது அருமை
வித்தியாசமான அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா!
நீக்குபடித்த சொற்களைக் கொண்டு அருமையாக கவிதை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவிதை அருமை வாழ்த்துக்கள்............
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! நன்றி!
நீக்குஇயலாது கிரேஸ் இயலாது!..
பதிலளிநீக்குஅப்படிச் சொல்ல இயலாது!..:)
அரும்பதச் சொற்கள் தேடி
அருமையாக இணைத்த
கரும்பென இருக்கும் கவி!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.2
புதுப்புது வார்த்தைகளின் புது வடிவம் அழகுங்க. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றிங்க சசிகலா!
நீக்குபடிறு .. நடலை...
பதிலளிநீக்குஅறிந்துகொண்டேன் அழகிய சொற்களை....
அழகிய கவிதை...
மிக்க மகிழ்ச்சி! நன்றி மகேந்திரன்!
நீக்குTa.Ma: +1
நீக்குநன்றி நம்பள்கி!
நீக்குஇயலவே இயலாது சகோதரி. புத்தம் புதிய சொற்களில் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் புதுக்கவிதை படைத்த தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குஉங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன்..பாரதி கண்ட புதுமைப்பெண் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி!
நீக்குஉங்கள் மனமார்ந்தப் பாராட்டிற்கு மிக்க நன்றி பாண்டியன். உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பில் கண்டிப்பாகத் தொடர்வேன். நன்றிபல!
புதிய சொற்களை கவியில் அழகுறத்தந்தீர்கள்.
பதிலளிநீக்குவருகை கண்டு மகிழ்ச்சிங்க மாதேவி, மிக்க நன்றி!
நீக்குபொய்யில்லை, அருமை!
பதிலளிநீக்குநன்றி ஜனா!
நீக்குபொய் என்ற சொல்லுக்கு இத்தனை வேறு பெயர்கள் இருக்கின்றனவா? நன்று... த.ம.7
பதிலளிநீக்குஆம்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்!
கவிதை வாயிலாய் புது தமிழ் சொற்கள் அறிமுகம் அருமை! சிறப்பான படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்!
நீக்குஆம்.புதிய சொற்களைத் தெரிவித்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஐயா, கருத்திற்கு நன்றி!
நீக்குபடித்த புதிய சொற்கள் கொண்டு அற்புத கவிதை படைக்கும் உங்கள் திறன் அபாரம் :)
பதிலளிநீக்குபொருள்பட புரியவைத்தமைக்கு நன்றி..
பதிலளிநீக்குவாங்க கலியபெருமாள்! கருத்திற்கு மிக்க நன்றி!
நீக்கு