சிலையானேன்..களிப்பானேன்!


தூறல் நின்ற பின்னும்
கரு முகிலா?
சூரியன் உதித்தப் பின்னும்
ஒளிரும் முழுநிலவா?
மரம் அருகில்லாத போது
பன்னீர்ப் பூக்களா?
கண் விழித்தப் பின்னும்
கனவு தேவதையா?
வியந்து மெய்மறந்து
சிலையானேன்

"என்னம்மா வீடு ஒழுங்குசெய்தாயிற்றா?"
அம்மாவின் கேள்வியும்
"ஓரளவு அம்மா"
நிலா உதிர்த்தப் பதிலும்
நீளக் கருங்கூந்தலும்
பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்...
எதிர் வீடு வந்தது
கனவு தேவதையே!
அறிந்து மெய்யுணர்ந்து
களிப்பானேன்!

படம் - நன்றி இணையம்

28 கருத்துகள்:

 1. உங்க எதிர் வீட்டுக்கு ஸ்ரீதேவி குடி வந்துட்டாங்களா ?
  உவமைகள் உவப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா என் எதிர் வீட்டுக்கு இல்லை ஸ்ரவாணி, இப்பாடல் தலைவனின் வீட்டுக்கு... :)
   உவந்தது கேட்டு உவக்கிறேன் , நன்றி நவில்கிறேன்!

   நீக்கு
 2. தேவதை தந்த அற்புதமான கவிதை
  அருமையிலும் அருமை
  தொடர (கவிதையை ) வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரமணி ஐயா!
   ஆமாம், பாடல் தலைவன் தேவதையைத் தொடரட்டும், நான் கவிதையைத் தொடர்கிறேன் :)
   வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 3. கருத்தினைக் கவர்ந்த கனவுத் தேவதை
  கண்வழி புகுந்து கவிதையாய்க் கலந்தனளோ...:)

  அழகான தேவதை நிழற்படமும்
  கவிதையும் கொள்ளை கொள்கிறது!

  வாழ்த்துக்கள் தோழி!

  த ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் ஆகிறது போலத் தோழி, காதல் வயப்படும் இளைங்கர்களுக்கு :)

   மிக்க மகிழ்ச்சி தோழி, உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 4. நன்றாகவே கையாளப்பட்டுள்ளது... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி திரு.தனபாலன்! உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி பல!

   நீக்கு
 5. வணக்கம்
  பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்
  எதிர் வீடு வந்தது
  கனவு தேவதையே!
  அறிந்து மெய்யுணர்ந்து
  களிப்பானேன்!

  கவிதையின் வரிகள் முத்தானது தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், ரசித்த வரிகள் தெரியப்படுத்திக் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரூபன்!

   நீக்கு
 6. பதில்கள்
  1. நானல்ல ஐயா :) பாடல் தலைவன்!
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 7. கனவு தேவதையை கண்களால் காணும் போது கவிதை வரமால் போகிடுமா! வரிகள் அனைத்தும் கவி பேசுகிறது சகோதரி. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே,,எப்படி வராமல் போகும்? :)
   உங்கள் கருத்துரை கண்டு மகிழ்கிறேன், மிக்க நன்றி சகோ!

   நீக்கு
 8. அட.. அட. உங்கள் தலைவன் உங்களுக்காக எழுதியதை சுட்டுட்டீங்களா :)

  //கண் விழித்தப் பின்னும்
  கனவு தேவதையா?//

  சூப்பர் சூப்பர்.. கவிஞர் கற்பனைக்கு ஆண் பெண் பேதமில்லை என்று நிருப்பிச்சிட்டீங்க :)

  பதிலளிநீக்கு
 9. எங்கப்பா இறக்கைகளைக் காணோம்..முடியவிரிச்சிட்டுப் பறப்பாங்களோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவதைக்கு இறக்கை கண்டிப்பாக இருக்குமோ? :) மனமே இறக்கை, இல்லையே எல்லை!
   கருத்திற்கு நன்றி கலியபெருமாள்!

   நீக்கு
  2. உண்மைதான் தோழி..சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் ...மனமிருந்தால் எங்கும் பறக்கலாம்...

   நீக்கு
 10. அழகான கவிதை... தலைவன் தலைவிக்கு எழுதியது...!!!

  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வெற்றிவேல், கொஞ்சம் அந்தப் பக்கம் போய் யோசிக்கலாம்னு.. :)
   உளமார்ந்த நன்றி!

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...