Saturday, October 12, 2013

உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்

மதி மயக்கும் மதி
குளுமை குறையாத் திங்கள்
நிலம் ஒளிரச்செய்யும் நிலா
வளரும் தேயும் பிறை
புவி சுற்றும் சந்திரன்

பல பெயர்கள்
பல தோற்றங்கள்
மாறுவதில்லை  பொலிவு
தவறுவதில்லை ஈர்ப்பு
நித்தம்  கண்டாலும்
எத்துனை அழகு!

அலுப்பதில்லை அனுதினம்
அம்புலியின் அமைதி
போதவில்லைப்  பொழுதும்
பொலிவில் பொதிந்துவிட
மனதிற்கு மலர்ச்சி
மதியுடன் மௌன மொழிகள்

பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்!



24 comments:

  1. வணக்கம்
    பல பெயர்கள்
    பல தோற்றங்கள்
    மாறுவதில்லை பொலிவு
    தவறுவதில்லை ஈர்ப்பு
    நித்தம் கண்டாலும்
    எத்துனை அழகு!

    உண்மையான வரிகள் இரசித்தேன் கவிதை அருமை வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நித்தமும் பார்த்தாலும் அலுக்காது நிலவு
    நித்தமும் படித்தாலும் திகட்டாது உங்கள் கவி.

    ReplyDelete
    Replies
    1. கவியாய் அன்போடு பாராட்டிய உங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரவாணி!

      Delete
  3. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன்!

      Delete
  4. மதியுடன் மௌன மொழிகள்
    Nanru.....
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவைக்கவி அவர்களே

      Delete
  5. இதமான கவிதை...

    ReplyDelete
  6. தமிழ் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாடுபொருள் நிலவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..இன்று உங்கள் கவியிலும்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிலாச்சோறு சாப்பிட்டு நிலாப்பாடல்கள் எண்ணியிருக்கிறோம்...
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! அழகான வரிகளில் அமைதியாய் கவிபாடி விட்டீர்கள். அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! // இல்லையென்றே நினைக்கிறேன். மனமார்ந்த கருத்திற்கு நன்றி சகோ.

      Delete
  8. என்னமா ரசிச்சு எழுதுரிங்க.. விவரிக்க வார்த்தைகள் இல்லை.. சூப்பர் ஒ சூப்பர் :) .

    ReplyDelete
    Replies
    1. :) உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி பல ஸ்ரீனி!

      Delete
  9. அருமை கிரேஸ்!! ரசித்து எழுதியிருக்கிறாய்.. நானும் ரசித்துப் படித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தியானா! நிலவு எப்பொழுதும் என்னை மயங்க வைத்துவிடும் :)

      Delete
  10. அருமை
    ரசித்தேன்
    சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ஜெயக்குமார்!

      Delete
  11. என்னவொரு ரசனையும் கவி வரிகளும்..

    அசரவைக்கின்றீர்கள் தோழி! உங்கள் கற்பனையை எனக்கும் கொஞ்சம்
    கடனாகத்தாருங்களேன்...:)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனமார்ந்த இனிய பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி!
      ஆனால் நான் என்ன தருவது, உங்கள் கற்பனையும் திறமையும் கவியாகவும் க்விளிங்காகவும் வடிவம் பெறுகிறதே :)

      Delete
  12. மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த கருத்திற்கும் நன்றி விவரணன். :)

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...