Thursday, October 24, 2013

இணைக்கும் இணையமாம்

இருவரும் இணைந்தே ஒன்றாய்
இறகுப் பேனா பிடித்தோம்
மூங்கில் நாணல் பேனாக்களிலும்
பாங்காய் மை தொட்டுத் தொட்டுப்
படைத்தோம் இன்றும் அழியாக்
காப்பியங்களும் காவியங்களும்
மைக் குடித்தப் பேனாவிலும்
படைத்தோம் கவிதைகளும் கட்டுரைகளும்

கரிப்பொருள் எழுதுகோலும்
கரையக் கரைய நம்மிடையே
கட்டவிழ்த்தே இலக்கியம் படைக்க
இணைந்து படைக்கும் இன்பத்தில்
இறுமாந்தே இருந்தப்  பொழுதில்
இடையில் நுழைந்தது தட்டச்சு
இன்னும் சேர்ந்தது கணினி
இணையாமல் தனித் தனியே
தட்டுகிறோம் தவிப்புடன் நாமே
இணைக்கும் இணையமாம் இது எப்படி?

--கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும்


32 comments:

  1. ஆம் விரல்களைப் பிரிக்கும் இணையம்
    வித்தியாசமான அற்புதமான சிந்தனை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ரமணி ஐயா!

      Delete
  2. இனிக்கும் இணைக்கும் இணையம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்!
      நன்றி திரு.தனபாலன்!

      Delete
  3. அட ஆமாம்.. இப்படிப் பிரித்து சதிசெய்துவிட்டதே இந்தக் கணினி...:(
    இணையம் இதயங்களையாவது இணைக்கட்டும்!

    நல்ல சிந்தனை! அற்புதம்! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி, அதைச் செய்கிறது என்று நினைக்கிறேன். :)
      மிக்க நன்றி தோழி!

      Delete
  4. அட, இது நல்லா இருக்கே!!

    ReplyDelete
  5. Replies
    1. நன்றி வெற்றிவேல்!

      Delete
  6. ada..!

    vithiyaasamaana sinthnai...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சீனி!

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்!

      Delete
  8. அட.. இப்படியும் யோசிப்பாங்களா... ரசிக்க வைக்கும் ரசனை... சூப்பர் கிரேஸ் :)

    ReplyDelete
    Replies
    1. யோசிச்சுட்டேனே :)
      நன்றி ஸ்ரீனி!

      Delete
  9. உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு... பாடல் நினைவுக்கு...

    ReplyDelete
    Replies
    1. ஆம், அருமையான பாடல்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜனா!

      Delete
  10. வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க கிரேஸ்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க எழில்! உங்கள் வாழ்த்திற்கு நன்றி!

      Delete
  11. உனக்கு மட்டும் எப்படி கிரேஸ் இப்படி யோசிக்க முடியுது? :))

    இப்படி இருந்தாலும் எங்களுக்கு ஒரு அருமையான கவிதை கிடைத்ததே..அருமையான சிந்தனை கிரேஸ்!

    ReplyDelete
    Replies
    1. தானா வருது தியானா :)
      மனமுவந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி தியானா!

      Delete
  12. வணக்கம் சகோதரி..
    வித்தியாசமான சிந்தனை. விரல்களைப் பிரித்தாலும் இதயங்களை இணைக்கும் பணியை படு வேகமாய் செய்து கொண்டிருக்கிறது. பதிவிட்ட அடுத்த நொடியில் நமது எண்ணத்தை அனைத்து உள்ளங்களும் உவகையோடு படித்து கருத்திடுவது இணையத்தின் துணையாய் தானே... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோ. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே! உண்மைதான், உலகின் பல இடங்களிலிருந்தும் நம் பதிவைப் படித்து வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் இணையத்தால் கிடைத்தனவே! உங்கள் வருகை மகிழ்ச்சியே சகோ, தாமதம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. பல பணிக்கிடையே வந்து இனிதாய்க் கருத்திட்டமைக்கு உளமார்ந்த நன்றி பாண்டியன்!

      Delete
  13. அருமையான சிந்தனை! :-)

    ReplyDelete
  14. இதுதான் பிரிவோம் சந்திப்போம் என்பதோ....

    ReplyDelete
    Replies
    1. கணினி சந்திக்க விடமாட்டேன் என்கிறதே..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலியபெருமாள்!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...