ஐங்குறுநூறு 411 - சொன்ன நேரத்திற்கு முன் வந்துவிட்டேன் பார்த்தாயா?

ஆர்குரல் மேகம் பெருமழைத் தூவ 
கார்துவங் கிற்றே அழகியக் காட்டில் 
வீழ்துளி தந்த புதுப்புனல் ஆட
தாழ்கருங் கூந்தல் தலைவிவா விரைந்தே


ஐங்குறுநூறு 411 - பாடியவர் பேயனார், தலைவன் தலைவியிடம் சொல்லும் முல்லைத்திணைப் பாடல்.


ஆர்குரல் எழிழி அழிதுளிச் சிதறிக் 
கார் தொடங்கின்றால் காமர் புறவே
வீழ்தரு புதுப் புனல் ஆடுகம் 
தாழ் இருங்கூந்தல் வம்மதி விரைந்தே 

எளிய உரை: மிகுந்த முழக்கத்துடன் மேகம் பெருமழைப் பொழியத் துவங்கிவிட்டது. அழகிய காட்டில் விழும் துளிகள் தரும் புதுப்புனலில் ஆடுவோம், தாழ்ந்த கரிய கூந்தலை உடைய பெண்ணே, விரைந்து வருவாயாக.



சொற்பொருள்: ஆர்குரல் - நிறைந்த முழக்கம், எழிழி - மேகம், அழிதுளி - மிகுந்த துளி/பெருமழை, சிதறிக் - பொழிந்து, கார் - மழைக்காலம், தொடங்கின்றால் - துவங்கி விட்டது, காமர் - அழகிய, புறவே - காடே, வீழ்தரு புதுப்புனல் - விழும் துளிகள் தந்த புது ஓடை/ஆறு, ஆடுகம் - ஆடுவோம், தாழ்  இருங்கூந்தல் - தாழும் கரிய கூந்தல், வம்மதி  - பெண்ணே வருவாயாக, விரைந்தே - விரைந்து

விளக்கவுரை: கார் காலத்தில் வருவேன் என்று சென்ற தலைவன் பருவம் துவங்கும் முன்பே வினை முடித்து வருகிறான். தலைவியைக் கூடி மகிழ்ந்த பின் மழை பொழிகிறது. உடனே தலைவன் தலைவியை  மழையால் மிகுந்து ஓடும் புதுப்புனலில் விளையாடலாம் என்று அழைக்கிறான். மழை பொழியத் துவங்கியதைக் குறிப்பிட்டுச் சொல்லித் தான் கார் காலம் துவங்கும் முன் வந்ததைத் தலைவிக்கு மகிழ்வுடன் உணர்த்துகிறான். 'பார், சொன்ன காலத்திற்கு முன்பே வந்துவிட்டேன்' என்று பெருமை பாராட்டுகிறான்.
411 முதல் 420 வரையிலான ஐங்குறுநூற்றுப் பாடல்கள் 'கிழவன் பருவம் பாராட்டுப்பத்து' என்று அழைக்கப்படும். கிழவன் என்பது தலைவனைக் குறித்க்கும். தலைவன் பருவ காலத்து முன்பே வந்ததால் பெருமிதத்துடன் மகிழ்வதைப் பாடும் பாடல்கள்.

ஆங்கிலத்தில் விரைவில் :)

என் பாடல்:
முகில்கூட்டம்  ஆர்ப்பரிக்குதே என் மானே
மழைத் துளிகள்பார் ஆரம்பமே  மழைக்காலம்
அழகியக்  கானகத்தே எழும்பியப்  புதுப்புனல் நீராட
தாழும் கருங்கூந்தல் தாரகையே தாவியே வந்திடடி

24 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியான பாடலின் விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. பாடலும் பொருளும் அறிந்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. கடந்த வாரம்தான் கிழவன் என்றால் தலைவன் என்றும் அரசன் என்றும் பொருள் உள்ளதாக வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறினார். தற்போது தங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி. தங்களது இலக்கியத் தேடல் அறிந்து மகிழ்ச்சி. எனது வரலாற்றுத் தேடலில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி.
      கண்டிப்பாகப் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி ஐயா.

      நீக்கு
  4. அருமையான விளக்கம் கிரேஸ் .. பல புதிய சொற்களை அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல விளக்கம் அக்கா... தலைப்பு இன்னும் ஈர்ப்பா இருக்கட்டும்.

    வர வர உங்களோட வார்ப்பிலக்கியம் செம்மை ஆகிட்டே இருக்கு....

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல். தங்கள் விளக்கம் உட்பட! தங்கள் பாடல் பேயனாரோடு போட்டி போடுகின்றதே! அருமை! வியந்தோம்! தங்களின் தமிழைக் கண்டு!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    சகோதரி

    பாடலுக்கு கருத்துள்ள உரை கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    பதிலளிநீக்கு
  8. அருமை சகோ அருவியாய் வார்த்தைகள் விளக்கவுரை படத்தைப்போல....
    தமிழ் மணம் ஐந்தருவி
    எனது பதிவு அ.அ.அ.

    பதிலளிநீக்கு
  9. தம 6
    பாடலும் பொரும் அருமைம்மா. புதிய சொற்களும் அறிந்தேன்.பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  10. பழந்தமிழ் இலக்கியம் அதிகம் அறியாத என்னை போன்றவர்களுக்கு எளிமையாக விளங்கும்படி அருமையான விளக்கம் !

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி சகோ, மிக்க நன்றி.

      உங்கள் பதிவைப் படித்தேன், பயனுள்ளப் பதிவு. பகிர்விற்கு நன்றி சகோ

      நீக்கு
  11. அன்புள்ள சகோதரி,

    ஐங்குறுநூறு 411 - பாடியவர் பேயனார், தலைவன் தலைவியிடம் சொல்லும் முல்லைத்திணைப் பாடலை அழகிய படத்துடன் அருமையான விளக்கம்.

    நன்றி.
    த.ம. 7

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...