பெருமைமிகு பெண்கள் - வல்லினச்சிறகுகளில் என் பகுதி

 புதுச்சேரி ஒரு துளி கவிதை நிறுவனர் திரு.அமிர்தகணேசன் அவர்கள் உலகப் பெண் கவிஞர் பேரவையை நிறுவியி ருக்கிறார். பெண் கவிஞர்களை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைக்கவும் அகன் ஐயாவின் முயற்சி இது. இதில் உலகெங்கிலுமிருந்து பெண்கள் இணைந்திருக்கிறார்கள்.  இந்தப் பேரவை சார்பாகப் பெண்களே நடத்தும் வகையில் ஒரு கவிதை மின்னிதழ் வல்லினச்சிறகுகள் என்ற பெயரில் கடந்த செப்டெம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அகன் ஐயா வழிநடத்துதலில் ஐந்து பெண்கள் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். கவிதைகளுடன் நூலறிமுகம் ஒன்றும்,  நேர்காணல்கள் மூன்றும்  உலகப் பெண் கவிஞர் ஒருவரைப்பற்றிய கட்டுரையும் (அன்புச் சகோதரி வலைப்பதிவர் மு.கீதா எழுதுவது, இவர்இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்) இடம்பெறும். இதில் 'பெருமைமிகு பெண்கள்' என்ற பகுதியில் சாதனைப் பெண்களை நேர்காணல் செய்து வருகிறேன்.

பிப்ரவரி மாத இதழில் இடப் பெற்றிருக்கும்  என்னுடைய நேர்காணல் பகுதியை இங்கே பகிர்கிறேன். நண்பர்கள் வாசித்துக் கருத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

முழு இதழையும் இந்த இணைப்பில் வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், வல்லினச் சிறகுகள் -  பிப்ரவரி 2021
ஆறாம் பயணம் - படைப்புகளுக்கு ஒளி சேர்க்கும் கண்கவர் ஓவியங்களுடன்!
https://tinyurl.com/3rzzc2ez
நன்றி!
- ஆசிரியர் குழு

 

 

 

 

 

 


 

 

 


 

 

 

 

இனி ஒவ்வொரு திங்களும் இப்பகுதியை வலைத்தளத்தில் வெளியிடுவேன்.

நன்றி!

தேன்மதுரத்தமிழ் அன்புடன்,

கிரேஸ் பிரதிபா

2 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...