என்னுயிர் தொட்டுவரும் - 1

Image:Thanks to Internet

 

ஒரு வாளி நிறையக் கற்களை 

உருட்டிவிட்டதைப் போல 

யப்பாஆ! இவ்வளவு நேரமா! 

எதன் மீது விழுகிறதோ என்றோர் பதட்டம்! 

பெருத்த கட்டியத்துடன் 

விண்ணிலிருந்து துள்ளிவரும் நீர்த்துளிகள்! 

அவற்றிற்கு வழிகாட்டவோ மின்னல் விளக்குகள்!

 

சாய்ந்தாடும் மரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார் தாத்தா 

சாளரம் அறையின் மேற்பாதிச் சுவராய் நீண்டிருக்க 

சாலையைப் பார்த்துக்கொண்டே!

பின்கட்டு முற்றத்தில் மழைதொட்டுவந்தபின்

மரநாற்காலியின் வேலைப்பாடுகளில் 

விளையாடிக் கொண்டிருக்கிறேன் 

ஃபிராக் அணிந்திருக்கும் நான் 

தாத்தாவுடன் கதைத்துக்கொண்டே!


அட்லாண்டாவின் இடிமழை 

காலம்குதித்துக்

கொடைக்கானலுக்குக் கொண்டுசென்றது?!

எனக்கு வியப்பில்லை...

சாரலும் தூறலும் 

மலரும் மேகமும் 

காற்றும் கருத்தும் 

ஏதோவொன்று

செய்வதுதான் அவ்வப்போது!

என்

வேரோடும் இடங்களெல்லாம் 

என்னுயிர் தொட்டுவரும்!

- கிரேஸ் பிரதிபா 

8 செப்டெம்பர் 2021


16 கருத்துகள்:

 1. அட்லாண்டா மழை...சடசடத்தே பெய்யும் பெருமழையும், எங்கும் நிறைந்திருக்கும் தண்மையும், அடர்ந்தோங்கி இருக்கும் மரங்களும், அழகான இயற்கை சூழலும், இனிமையான நினைவுகளையும் மீட்டெடுத்துக் கொடுத்தது உங்கள் கவிதை. மனமார்ந்த நன்றிகள் dear.

  பதிலளிநீக்கு
 2. அழகான மழை வர்ணிப்பு, க்ரேஸ். அதுவும் பழைய நினைவுகளுடன்!!!

  விண்ணிலிருந்து துள்ளிவரும் நீர்த்துளிகள்!

  அவற்றிற்கு வழிகாட்டவோ மின்னல் விளக்குகள்!//

  ரசித்தேன்!!! நல்ல அழகான வரி! கற்பனை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதா. ரசித்த வரிகள் சுட்டிக் கருத்திட்டதற்கு நன்றியும் மகிழ்ச்சியும். :-)

   நீக்கு
 3. எெ எழுத்துக்களால் எண்ணங்கள் தொட்டுத்தொட்டு எழுதிய தூரிகை காட்சிப்படுத்தியது கண்களுக்குள் ஒரு திரைப்படத்தை

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...