அனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்

 

மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாள். அனைத்துலக மகளிர் நாள் என்றவொரு அமைப்பு இருக்கிறது, (International Women's Day). இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மகளிர் நாளின் மையக்கருத்தாக ஒன்றை அறிவிப்பார்கள. பாலினச் சரிசமநிலைக்கு நாம் எப்படிப் பங்களிக்கலாம் என்று பல்வேறு வழிமுறைகளைச் சொல்லி ஒவ்வொருவரையும் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம். 

அப்படி 2021ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து Choose To Challenge, அஃதாவது அறைகூவலைத் தெரிவு செய், அல்லது சவாலைத் தெரிவு செய்! நாம் அனைவரும் பாலினப் பாகுபாட்டையும் பாலின ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதைத் தெரிவு செய்யவேண்டும். நாம் அனைவரும் பெண்களின் முன்னேற்றத்திற்கு  வழியமைத்துப் பெண்கள் முன்னேற்றத்தைக் கொண்டாட முன்வரவேண்டும். அனைவரையும் உள்ளடக்கியச்  சரிசமமான உலகினை நாம் அனைவரும் இணைந்து உருவாக்கமுடியும்.

அதனால், ஒன்று சேருங்கள்! இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அதனை உறுதி செய்யும்வண்ணம் உங்கள் கரத்தை உயர்த்தி (மேலேயிருக்கும் என் படத்தில் உள்ளது போல) ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். மறக்காமல், #IWD2021, #ChooseToChallenge, #அனைத்துலகமகளிர்நாள்2021, #அறைகூவலிடத்தெரிவுசெய், #சவாலிடத்தெரிவுசெய் என்று குறித்திடுங்கள். 

படம் போடுவதோடு மட்டுமல்ல, இந்த ஆண்டுமுழுவதும் இதனை நினைவில் இருத்திச் செயல்படுங்கள். 

உலக மகளிர் நாள் கொண்டாடுவதன் முக்கியத்துவம் பற்றியும்வரலாற்றைப் பற்றியும் என்னுடைய வளையொளிப் பதிவு கீழே. பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். 

இனிமையான சமநிலைச் சமூகம் அமைத்திட ஒன்றிணைவோம்! நன்றி!

 உலக மகளிர் நாள் குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள்:

2015இல் உலக மகளிர் நாள் வரலாறு 

பெண்மையை நான் மதிக்கிறேன் வலைப்பதிவர், அன்புத்தோழி, மனமகிழ் நிறுவனத்தின் நிறுவனர் எழில் அவர்களின் கவிதையை வாசிக்கலாம்.

கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? இதனை என்னுடைய வலையொளியிலும் காணலாம். 2020ஆம் ஆண்டிற்கானமையக்கருத்துடன், ஒவ்வொருவரும் சமநிலைக்கு.


கருத்துகள்

  1. நல்லதொரு பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    உலக மகளிர் நாளுக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ்! என் அடையாளம்!

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே

செம்மொழியின் செம்மொழி