அனிகம் நீயே!

தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!

- கிரேஸ் பிரதிபா
 

அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;

கருத்துகள்

  1. அருமை மா.. புதிய சொற்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும். புதிய சில சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ்! என் அடையாளம்!

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே

செம்மொழியின் செம்மொழி