உன் வாசம் நுகர்ந்தவுடன்

புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்

பழகியதே என்றாலும்
உன்னைப் பார்த்தவுடன்
மகிழும் என் கண்கள்

புதிதல்ல என்றாலும்
உன் தழுவல் உணர்ந்தவுடன்
சிலிர்க்கும் என் தேகம்

பழகியதே என்றாலும்
உன் வாசம் நுகர்ந்தவுடன்
உயிர்க்கும் என் அணுக்கள்

பழகிய மழையே
நீ என்றும் அழகே
எப்பொழுதும் இனிமையே !

19 கருத்துகள்:

  1. மழை எப்பொழுதும் சுகம் தான் கிரேஸ்.. அருமையான கவிதை. அங்கு நல்ல மழையா?

    பதிலளிநீக்கு
  2. ''..பழகிய மழையே
    நீ என்றும் அழகே
    எப்பொழுதும் இனிமையே !..''
    உண்மையான வரிகள். உணர்ந்துள்ளேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோவைக்கவி அவர்களே!

      நீக்கு
  3. அருமை அருமை
    புத்தம் புதுக் காலை போல
    தினமும் பெய்தாலும் ஒவ்வொரு
    மழையும் அதன் ஒவ்வொரு துளியும்கூட
    அற்புதம்தான்
    புதியதுதான்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நீங்கள் சொல்வது புரியவில்லையே..
      தமிழின் மணம் பற்றி என்றால், அதற்கு ஈடில்லை :)

      நீக்கு
  5. அஹா.. அருமை... காதல் கவிதை மாதிரி வந்து கடைசியில் இயற்கை கவிதை முடுச்சுடிங்க :)

    பதிலளிநீக்கு
  6. கவிதை எம்மையும் நனைக்கின்றது.

    மழைவருது மழைவருது குடைகொண்டுவா :))

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...