இதுதான் காலக் கணக்கு

வைகறையில் தினமும் பாட்டன்
கைபிடித்து சென்ற முக்குக்கடை

அவருக்கு நாளிதழும் பழமும்
அவர் பேத்தி எனக்குப் பழமும்

வாங்கி மெல்ல நடந்த நடை
அதற்கு இல்லை ஈடு இணை

ஓர்நாளில் அவர் காலைக் குத்தியதே
சாலையில் கிடந்த ஓர் ஆணி

துண்டால் குருதி ஒழுக்கைக் கட்டிவிட்டு
ஒன்றுமில்லை என்றே  நடந்தார் என் கைபிடித்து

நான்காம் வகுப்பில் நான் படிக்க
ஏன் தான் கேட்டாரோ ஆசிரியர்

பாட்டன் யாருக்கு உண்டு என்று
பட்டென சொன்னேன் எனக்கு என்று

மறுநாளே வந்தது கொடுஞ்செய்தி
சென்றாரே பாட்டன் இயற்கை எய்தி

வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு
வெறுத்தேன் அந்த ஆசிரியரை அன்று

ஆசிரியர்மேல் தப்பில்லை வளர்ந்தபின் புரிந்தது
ஆண்டுபல ஆனாலும் பாட்டன் நினைவு அழியாதது

சாலையும் இருக்கே ஆணியும் இருக்கே
பாட்டன் இல்லையே இன்று

இதுதான் காலக் கணக்கு
அதுதான் பிடிக்கவில்லை எனக்கு 

23 கருத்துகள்:

  1. //சாலையும் இருக்கே ஆணியும் இருக்கே
    பாட்டன் இல்லையே இன்று

    இதுதான் காலக் கணக்கு
    அதுதான் பிடிக்கவில்லை எனக்கு //

    அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையாகச் சொன்னீர்கள்
    பயன்படுத்திய பொருட்கள் எல்லாம்
    அப்படியே இருக்க பயன்படுத்தியவர்
    இல்லாமல் போவதுதான் காலக் கொடுமை
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நினைவுகள் இனிமைதான் திரு,தனபாலன். உங்கள் கருத்திற்கு நன்றி!

      நீக்கு
  4. உண்மைதான் தோழி! நெஞ்சை விட்டு நீங்காதே அந்த பந்தமும் அவர்தம் பிரிவும்....

    மனதுள் மலரும் நினைவுகளானது எனக்கும் சில.....

    அருமையான படைப்பு! சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  5. பாட்டனை மறக்காத பேத்தியின் நினைவுகள் அற்புதம்

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. உண்மை! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெயக்குமார்!

      நீக்கு
  7. //வைகறையில் தினமும் பாட்டன்
    கைபிடித்து சென்ற முக்குக்கடை
    அவருக்கு நாளிதழும் பழமும்
    அவர் பேத்தி எனக்குப் பழமும்
    வாங்கி மெல்ல நடந்த நடை
    அதற்கு இல்லை ஈடு இணை//
    அருமையான வரிகள்! அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு முதல் நன்றி ஜனா!
      பிடித்த வரிகள் தெரியப்படுத்திப் பாராட்டிய கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  8. பாட்டனின் நினைவுகள் என் பாட்டனையும் நினைவுபடுத்துகின்றன. காலத்தின் கணக்கை யாரால் மாற்றித்திருத்த இயலும்? நினைவால் என்றும் நம் நெஞ்சத்தில் வாழ்கிறார்கள். கவலை வேண்டாம் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதமஞ்சரி, உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  9. ஹ்ம்ம் எங்க தாத்தாவை நினைவு படுத்துவிட்டீர்கள்.நானும் தம்பிகளும் அவர் கைகளைப் பிடித்த வண்ணம் சென்ற நாட்கள். அவர் சொன்ன அறிவுரைகள் அனைத்தும் மீண்டு வந்தன. நன்றி க்ரேஸ்.
    அந்த ஆணிதான் காரணமோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவையெல்லாம் மறக்கவே மறக்காது, இல்லையா வல்லிசிம்ஹன்?
      எதற்கு ஆணி காரணமா என்று கேட்டீர்கள்? எனக்குப் புரியவில்லை :)
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  10. அருமையான நினைவுகள்... பதிவாக்கிய விதம் அருமை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...