திருமணத்திற்கு
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக் கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்
வரதட்சிணையே!!
இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக் கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்
வரதட்சிணையே!!
இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!
கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நடக்கும் நாள் வெகு தொலைவில் மட்டுமே உள்ளது.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!
நீக்குசரியாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குநன்றி திரு.தனபாலன்!
நீக்குஒரு பக்கம் வரதட்சணை, அரேஞிட் மேரேஜ்னு ஒரே சாதிக்குள்ளே கல்யாணம் நடக்குது..
பதிலளிநீக்குஇன்னொரு பக்கம் "லிபெரல்"னு சொல்லிக்கிட்டு எதையாவது செய்றாணுக அரைவேக்காடுகள்..
யாரும் வாழ்க்கையை சரியாகப் புரிந்துகொண்டு வாழப்போவதில்லை..நல்ல வேளை உங்களுக்கு ஒரு ப்ளாக் இருக்கு, இப்படி எதையாவது கவிதை கட்டுரைகளிலாவது நம் ஆசையை நிராசையை எழுதி திருப்தி அடைந்து கொள்ளலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வருண்!
நீக்குஅருமை சகோதரி நன்று
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார்.
நீக்குமிகச் சரி
பதிலளிநீக்குஇருக்கிறார்கள் கொடுக்கட்டும் என்பது கூட
வரதட்சனைக் கொடுமைதான்
கெட்டதில் சின்னக் கெட்டது பெரியக் கெட்டது
என இருக்கா என்ன ?
ஆமாம், கருத்துரைக்கு நன்றி ஐயா!
நீக்குரமணி அய்யா சொன்னது போல் கெட்டதில் என்ன வித்தியாசம் வாழப்போவது அந்தப் பெண்ணுடனுனான அன்பிலும் ,நேசத்திலும் என்பதை உணராதவரை இது தொடரத்தான் செய்யும்.... எண்ணம் அருமை கிரேஸ்...
பதிலளிநீக்குஉண்மைதான் எழில்..ஆனால் படித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பட்டம் பெற்றவர்கூட இதனைப் புரிந்துகொள்வதில்லை.
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில்!
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் மாறவேண்டும். மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்குவோம். வரும் தலைமுறையிலாவது இந்த வரதட்சிணை பேரங்கள் காணாமற்போகட்டும். சிறப்பான கரு. பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குஆமாம் நாம் துவங்குவோம்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கீதமஞ்சரி!
உண்மை தான்... ஆனா இந்த நிலைமை மாறுமா என்பது பெருத்த சந்தேகமே ... :(
பதிலளிநீக்குஆமாம்..அடுத்த தலைமுறையிலாவது மாறட்டும்....உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீனி
நீக்கு