இவன் மேல் எனக்கு காதலா?

தினமும் என்னை அழவைத்தாலும்
கண்கள் சிவக்க வைத்தாலும்
தினமும்...ஏன்
தினத்தில் பலமுறையும்
இவனை நாடிச் செல்கின்றேனே
இவன் மேல் எனக்குக்  காதலா?







38 கருத்துகள்:

  1. காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை. வெங்காயம் மட்டுமே. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா உண்மைதானே ஐயா. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    2. உங்கள் கவிதையும் வாசகர் வை.கோபாலகிருஷ்ணன் கருத்தும் இரண்டும் சிரிக்க வைக்கிறது...

      நீக்கு
    3. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி NRIGirl.
      கவிதை சிரிக்கவைத்ததோ இல்லையோ, ஐயாவின் கருத்து நிச்சயம் சிரிக்கவைக்கிறது. :)

      நீக்கு
    4. என் கருத்தினை ரஸித்து மகிழ்ந்த [கிரேஸ்+NRIGiri] இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)))))

      நீக்கு
    5. இந்த கவிதைதான் புரியும் படியாக இருந்தது அதனால் ரசித்து மகிழ்ந்தேன் அதனோடு உங்கள் கருத்தையும் ரசித்து மகிழ்ந்தேன்

      நீக்கு
  2. பழகிப் போனான்
    கண்ணைக் கசக்கவைத்தாலும்
    அழவைத்தாலும் அவன் உறவு
    தொடர்ந்து தேவை என மருத்துவர்கள்
    சொல்கிறார்கள்
    அதனால் என்ன செய்ய
    அவன் எட்டி எட்டிப் போனாலும்
    எட்டாதபடி மலை உயரம் போனாலும்
    காதலித்துத் தொலைக்கவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எப்படியானாலும் அவனை விடக்கூடாது. :)
      கருத்துரைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  3. ;)))

    உங்கள் காதலருக்கு போட்டுவிட்ட மேக்கப் சூப்பர் கிரேஸ். ;D

    பதிலளிநீக்கு
  4. காதலேதான் பகிர்வு வந்துவிட்டதே.:))

    பொன்விலைக்குபோகும்போது அருமை புரியும்.

    பதிலளிநீக்கு
  5. அட அட. வெங்காயத்திற்கு வந்த வாழ்வை பாருங்கப்பா அது பேருல கவிதை... கண்டிப்பா காதல் தான் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  6. எப்படிச்சொல்லலாம் பெரியார்? வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என்று!
    தினமும் என்னை அழவைத்தாலும்
    கண்கள் சிவக்க வைத்தாலும்
    தினமும்...ஏன்
    தினத்தில் பலமுறையும்
    இவனை நாடிச் செல்கின்றேனே
    இவன் மேல் எனக்குக் காதலா?....பாவம் இப்படிப்பட்ட கவிதைகளை அவர் வாசித்திருக்க மாட்டார்? வெங்காயத்தைப் பற்றி இப்படியா? வியக்கத்தான் வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. அட தேனு இனி யாரும் வெங்காயம் என்று திட்ட முடியாது இல்ல . ஏனா ? உங்களுக்குத் தான் கோபம் வந்து விடுமே இனி கவனமாகத் தான் இருக்க வேண்டும்.
    ஆமா வெங்காயத்தில் எதுவும் இல்லை என்று ஏன் தான் சொல்கிறார்களோ.
    அதில் நோய்களை விரட்டும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. முக்கியமாக இன்சுலின் சுரக்க வல்லதுமாமே. நன்றி ! நகைச் சுவையோடு தந்த கவிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இனியா, நல்லது தான்..இப்போ விலை ஏறிப் போயுடுச்சாமே..காதலுக்கு வந்த தடையைப் பாருங்க :-)

      நீக்கு
  8. தினமும் என்னை அழவைத்தாலும்
    கண்கள் சிவக்க வைத்தாலும்
    தினமும்...ஏன்
    தினத்தில் பலமுறையும்
    இவளை நாடிச் செல்கின்றேனே
    இவள் மேல் எனக்குக் காதலா?

    அவள் யார் தெரியுமா ?
    என்னை பூரிக்கட்டையால் வதைக்கும் என் மனைவிதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா

      இதுக்கே இப்டி சொன்னா, நான் பூரிக்கு ஒரு கவிதை வச்சுருக்கேனே :)

      நீக்கு
  9. வெங்காயம் மட்டுமல்ல பெண்களும் நம்மை அழுக வைத்துவிடுவதில் திறமைசாலிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதற்கில்லை சகோ. :)

      வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

      நீக்கு
  10. Kadhale .. Kanneerudan meendum meendum kaiyil eduka vaikiradhe ��

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...