நாளைய சமுதாயம் நம் கையில்???!!!!

பலமுறை கேட்டிருக்கிறேன்
நாளைய சமுதாயம் நம் கையில்
என்று

பலமுறை பார்த்திருக்கிறேன்
அது உருவாகும் விதம் எப்படி
என்று

வரிசையில் நிற்கும் ஒரு பிள்ளை
புறக்கணித்து முன்னே செல்
என்னும் 'பெரியவர்'

இருவருக்கு ஒரு சீட்டு வாங்கி
கூட்டத்தைப் பயன்படுத்தி இராட்டினத்தில்
ஏற்றும் 'திறமைசாலி'

உயரம் வரைமுறை ஓர் விளையாட்டிற்கு
'பெரியவர்' ஆலோசனையில் எக்கிநின்று
உள்நுழையும் 'வெற்றிவீரன்'

எக்கி நிற்பதைப் பார்த்தொருவன் தடுத்திட்டால்
பார்த்துட்டானே  'சனியன்' அவன் நகரட்டும்
தொடரும் 'விடாமுயற்சி'

உல்லாசப் பயணத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு
'வயிற்றுப் போக்கு' என்று சொல்லிவிடு
சிறந்த வழிகாட்டும் பெற்றோர்

பொம்பிளப் பிள்ளைக்கு எவ்வளவு திமிர்
தள்ளி விட்டுட்டு ஓடுடா
விதைக்கப்படும் 'நல்ல' விதை

இப்படிப் பல வார்ப்புகள்
எப்படி மாறும் ஏக்கங்கள்
நாளைய சமுதாயம் நம் கையில்!!!!

12 கருத்துகள்:

  1. தங்களின் ஆதங்கங்கள் அத்தனையும் உண்மையே. அழகான ஆக்கம்.

    //இப்படிப் பல வார்ப்புகள்
    எப்படி மாறும் ஏக்கங்கள்//

    இப்போதைக்கு மாறவே மாறாது. ;(

    பகிர்வுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  2. முற்றிலும் உன்னுடன் ஒத்துப் போகிறேன் கிரேஸ்.. மிகவும் நல்ல படைப்பு..

    பதிலளிநீக்கு
  3. சிந்தனையினைத் தூண்டும் கருத்துக்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  4. அழுக்கான மனங்களின் வெளிப்பாட்டை நறுக்கென சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. படிப்பவரை சிந்திக்க வைக்கும் எழுத்து.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் மனப்பூர்வமான கருத்துரைக்கும் மிக்க நன்றி சசிகலா.
      வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. சூப்பர்... நல்லா கேட்டிங்க ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...