என் செய்வான் இருந்தால் ...

தேசியக்கவி பாரதி அவன்
பேசியமொழி இனியமொழி

கவி படைத்தான் கன்னித் தமிழில்
புவி மறைந்தாலும் வாழ்வான் புகழில்

தொலை நோக்கிப் பார்த்தான்
பெண்ணடிமைச்  சாடினான்

விடுதலை உணர்வை ஊட்டினான்
சமுதாயச் சிறுமை சாடினான்

எதைப் பாடவில்லை அவன்
எளியக் கவிபடைத்த உன்னதன்

பன்மொழிப் பாவலன் ஆனால்
தமிழ் மொழிக் காதலன்

அவன் இன்று இல்லை இப்புவியில்
என் செய்வான்  இருந்தால்

இன்றும்! இன்றும்  நிலை கெட்டே
இருக்கும் மானிடரைப் பார்த்து!!!

14 கருத்துகள்:

  1. அருமையான கவிதை
    இறுதியில் எழுப்பிப்போகுமொரு கேள்வி
    என்னுள் பல கேள்விகளை எழுப்பிப் போகிறது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கற்பனைக்கு எட்டாத காவியமல்லவா பாரதி..
    அவர் புகழ் பாடிய கவி அருமை!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  3. அருமை கிரேஸ்.பாரதியின் நினைவு கூறும் கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  4. அன்றும், இன்றும் ஏன் என்றும் மனிதன் நிலைகெட்டு, தரங்கெட்டுத்தான் இருப்பான் போலும் என்பதை உணர்ந்து இருப்பான். நாம் ஆயிரம் கோடி கவிபாடினாலும் 100 கோடி மக்களில் ஒரு நாலு பேரைத்தான் திருத்தமுடியும் என்பதை கண்கூடப்பார்த்து புன்னகைத்து இருப்பான். :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் ஆயிரம் கோடி கவிபாடினாலும் 100 கோடி மக்களில் ஒரு நாலு பேரைத்தான் திருத்தமுடியும்// இது என்னவோ கசப்பான உண்மைதான் வருண். ஆனால் புன்னகைத்து இருப்பானா என்பது ஐயமே! அன்றே வெகுண்டவன் எரிமலையாகி இருப்பானோ ... :)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  5. பாரதியின் புகழைப் போற்றும் தங்கள் கவிதை நன்றாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவர் அவர்களே !

      நீக்கு
  6. அவன் இன்று இல்லை இப்புவியில்
    என் செய்வான் இருந்த

    அவனுக்கு வரும் கோபத்தில்
    அவன், தான் இயற்றிய கவிதைகள் அனைத்தையுமே
    தீ இட்டு கொளுத்தியிருப்பான்.
    அதற்குள்ளே அவனும்
    புகுந்திருப்பான்.

    எதை இல்லையடி என நெஞ்சார நினைத்தானோ
    அதை உண்மையடி என ஒப்புக்கொள்ள அவனால் இயலாது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிவா, எவ்வளவு ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருப்பான்...உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...