அப்பாயி மாதிரியாம் நான்

 
படம்: நன்றி இணையம்

இன்று
நீ கடந்து சென்ற நாள்
எல்லோரும் அழுதார்கள்
நான் விழித்தேன்
அப்பாவும் தாத்தாவும்
கட்டிக்கொண்டு அழுதார்கள்
நானும் அழுதேன்
கை பிடித்து எண்ணெய் சியக்காய்
வைத்தார்கள்
கூந்தல் நீளம் என்று
முன் உச்சியில் கொண்டை போட்டார்கள்
உனக்குப் பெட்டியில் அழுத்தும் என்றோ?
மூன்றாம் நாள் பாலூற்ற
அனைவருடனும் கல்லறை வந்தேன்
எல்லோரும் செபிக்க
பேய் வருமோ என்று சுற்றும்முற்றும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல் முறை சேலை கட்டியதிலிருந்து
தெரிந்தோர் சொல்கிறார்கள்
அப்பாயி மாதிரியாம் நான்
எனக்கு மகிழ்ச்சியே
ஆனால், பார்க்க நீயில்லையே!
ஐந்தாறு வயதில் 
நடனமாடச் சொன்னபோது நான் ஆடவில்லை 
நீ மறந்திருப்பாய்
என் திருமணம் பார்த்துச் சென்றிருக்கலாமே
என் பிள்ளைகளையும் பார்த்திருக்கலாமே
பிற பாட்டிகள் பார்க்கும் பொழுது
இப்படித் தோன்றும் எனக்கு
ஆண்டுதோறும் 
உன்னை நினைத்து
உன் அதிரச மாவையும் தான்
அன்று செய்யாத செபத்தை
இன்று செய்கிறேன்!
உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்!
--உன் அன்பு பேத்தி
கிரேஸ் பிரதிபா

17 கருத்துகள்:

  1. மனம் கனக்கும் வரிகள் தோழி!

    அந்தப் பராயத்தில் தெரியாததெல்லாம் இப்பொழுது தெரியவந்து பாடாய்ப் படுத்துகிறது. உண்மைதான்...

    தங்கள் அப்பாயியின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக வேண்டுகிறேன்!...

    த ம.2

    பதிலளிநீக்கு
  2. அப்பாயியும் உங்களை நினைத்துக் கொண்டிருப்பார்.
    இறைவனிடம் வேண்டுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சுபாசினி!

      நீக்கு
  3. நானும் அம்மம்மா போலதான் என்பார்கள். உங்கள் உணர்வு புரிகிறது. கவிதை படிக்க என் கண்ணிலும் ஈரம்.

    அப்பாயி ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகளும் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  4. பேத்தியின் பாசமும் பாட்டியை இழந்த துயரமும் கவிதையில்! சிறப்பான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //முதல் முறை சேலைக் கட்டியதிலிருந்து
    தெரிந்தோர் சொல்கிறார்கள்
    அப்பாயி மாதிரியாம் நான்
    எனக்கு மகிழ்ச்சியே
    ஆனால், பார்க்க நீயில்லையே!
    என் திருமணம் பார்த்துச் சென்றிருக்கலாமே
    என் பிள்ளைகளையும் பார்த்திருக்கலாமே
    பிற பாட்டிகள் பார்க்கும் பொழுது
    இப்படி தோன்றும் எனக்கு//

    வருந்த வைக்கும் அற்புதமான நினைவலைகள். எல்லோருக்கும் இந்தப்பிரப்தம் இருப்பது இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. பேத்தியின் கண்ணோட்டத்தில்
    பதிவு செய்த கவிதை மனம் கலக்கிப்பொனது
    மனம் தொட்டக் கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. மனத்தை அழுத்தும் வேதனையை வெளிப்படுத்தும் வரிகள். அறியாமல் செய்யும் பிழைகளை ஆண்டவனும் பொறுத்துக்கொள்ளும்போது அறியா வயதில் நேர்ந்ததை அப்பாயி பொறுத்துக்கொள்ள மாட்டாரா? அவரது ஆசி என்றும் உங்களுக்குண்டு. மனம் தேற்றிக்கொள்ளுங்கள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...