தமிழே உதவ மாட்டாயா

நெஞ்சம் எல்லாம் நிறைந்திட்டான்
கொஞ்சம் பேச மறுக்கிறான்

தெரிந்து கொள்ள சில கேள்விகளும்
புரிந்து கொள்ளடா  என்று சில கேள்விகளும்

கடமையாய் கேட்டுவிட்டு பாவம்
மடமையாய் விழிக்கிறது உள்ளம்

பதிலை அறியவா கேட்டேன்
காதலை அறிவிக்கத்  தவிக்கிறேன்

புரிந்து தான் கொண்டானா?
புரியாதது போல நடிக்கிறானா?

அலைநுரையில் பந்தொன்று செய்து
தலையில் பட்டென்று போடவா?

மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா?

சினம் எரிமலையாய்ப் பொங்கி
தேனாய் வழிகிறதே என்ன விந்தை

எண்ணம் பலவிதமாய் தோன்றி
அவனையேச் சுற்றுகிறதே சிந்தை

தமிழே உதவ மாட்டாயா
கவியாய் காதலைச் சொல்வாயா


16 கருத்துகள்:

  1. தமிழ்தான் எத்தனை சிறப்பாய்
    உதவியிருக்கிறது
    மனம் கொள்ளைகொண்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனம் மிகையாக வலிக்கும் போது தமிழ் தானாக முன்வந்து உதவும் .
    அதற்காகக் கவலைப் பட வேண்டும் என்றும் இல்லைக் கொஞ்சம்
    மனதை வருத்திப் பாருங்கள் (உங்கள் மனதை :) ) கவிதை நினைத்தால்
    போல் வராது உழைக்கணும் :) வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாள் அடியாள். கவலை ஒன்றும் இல்லை தோழி, தப்பாக அர்த்தம் ஆகிவிட்டது போல..தமிழை தூதனுப்புவதாக கவிதை அமைத்தேன். :)

      நீக்கு
  3. உங்களுக்கு உதவாவிடின் அதற்குப் பெயர் தமிழல்ல தோழி!

    அழகிய கெ(கொ)ஞ்சல் கவிதை! மிகவே ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, தமிழ் உதவாமல் இருக்குமா.. :)

      உங்கள் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் நன்றி இளமதி!

      நீக்கு
  4. தமிழ் கண்டிப்பாக உதவும், தங்கள் காதலைச் சொல்ல...

    அழகான கவிதை தோழி...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இப்ப ரொம்ப உதவியா இருக்கும் :-).. அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  6. //மயிலிறகு கொண்டு வந்து
    கன்னத்தில் இரண்டு போடவா?//

    அருமையான வரிகள் கிரேஸ்.. உனக்கு தமிழ் நன்றாகவே உதவியுள்ளது.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் உதவாமலா இப்படி எழுதியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...