உள்ளத்தை என் செய்வேன்

பட்டுப் போல நான் கையில் ஏந்திய என் குழந்தை
அழுவது எதற்கென்று நான் தடுமாறி கற்றக் குழந்தை

இவனுக்கு ஒரு வயதாகி விட்டதா
என்று தோன்றியது முதல் வருடம்

இவனுக்கு இத்தனை வயதாகி விட்டதா
என்று தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும்

பள்ளி நேரம் தவிர்த்து நான் பிரியா
என் பிரியக் குழந்தை

பள்ளி ஏற்பாடு செய்த முகாம் செல்கிறான் இன்று
பெற்றோர் இல்லாமல் தனியாக

பத்திரமாகக்  கற்றும் மகிழ்ந்தும் வா என்றேன்
என் இதயமும் உடன் சென்று உருகி நிற்கிறேன்!

இன்று மாலை எப்படிப் போகும்
இன்று இரவு எப்படி உறங்குவேன்
என்று அறியேன்

என் பிள்ளை வளர்கிறான்
என்று புரிந்தேன்!!

மூளை சொல்வதை ஏற்காத
உள்ளத்தை என் செய்வேன்!

21 கருத்துகள்:

  1. மூளை சொல்வதை ஏற்காத
    உள்ளத்தை என் செய்வேன்!//

    தாய்மையின் தவிப்பைச்
    சொன்னவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பெற்ற மனது தவிக்கத்தானே செய்யும்

    பதிலளிநீக்கு
  3. பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் நன்மை தீமைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்து, ஒரு சில சமயம் அவர்களைப் பிரியும் போது (தற்காலிகமாகத்தான்) அந்த வேதனையை அந்தத் தவிப்பினைச் சொல்லிக்கொள்ள முடியாததொன்று...

    ஓடி விளையாடி மரத்திலேறிக் குதித்து இப்படிச் செய்யும்போதே ஐயோ விழப்போகிறாய் என அவதிப்படும் மனம், பிரிவை உணரத் தாங்க எவ்வளவு அவதிப்படும்..

    உணர்வுப் பிரதிபலிப்புக் கவிதை உள்ளம் ஊடுருவிச் செல்கின்றது.
    விரைவில் நலமாக மகிழ்வோடு வந்திடுவார் உங்கள் மகன்... வாழ்த்துக்கள்!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இளமதி நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்..அவர்களின் ஒவ்வொரு குதிக்கும் என் இதயமும் ஒரு குதி குதிக்கும். :)
      மிக்க நன்றி இளமதி..அவன் வந்தவுடன் அனுபவத்தைக் கேட்டு ஒரு பதிவு இடுகிறேன்.

      நீக்கு
  4. தவிப்பு சந்தோசம் ஆகி விடும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சந்தோசத்துடன் அவன் அனுபவத்தைக் கேட்டுப் பதிவிடுகிறேன்..நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  5. பல வருடங்கள் பின்னே அழைத்துப் போய் விட்டீர்கள் கிரேஸ். என் சின்னவர்கள் முதல் முறை காம்ப் போனது நினைவுக்கு வருகிறது. இதே உணர்ச்சி. படிக்கும் போது கண் கலங்கிற்று.
    என் குட்டித் தோழியும் முதல் முறையாக இந்த வாரம் போய் வந்திருக்கிறார். முதல்நாள் போய்ப் பேசினேன். அவர் ஓகே. அம்மாவும் அப்பாவும்தான் பெரிய டென்ஷனில் இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா இமா? முதல் நாள் பள்ளி, முதல் நாள் கேம்ப், எல்லாம் பெற்றோருக்கு கடினம் போல...
      உங்கள் குட்டித்தோழி மகிழ்ச்சியாக கழித்தார் என்று நினைக்கிறேன். கருத்திற்கு நன்றி இமா!

      நீக்கு
  6. உலகம் முச்சூடும் இதே கதையா;0)
    நான் வளர்கிறேனே மம்மின்னு சொன்ன பிறகும்
    பிள்ளைகள் பின்ன ஓடும் மனதைக் கட்டுப் படுத்த எப்போதும் முடியாது.
    மிக மிக ம்கிழ்ச்சியாகச் சென்று கதைகள் சொல்வான் உங்கள் மகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எங்கும் இதே தான் :)
      அவன் கதைகளுக்குக் காத்திருக்கிறேன்.. உங்கள் கருத்துரைக்கு நன்றி வல்லிசிம்ஹன்

      நீக்கு
  7. பிள்ளைகள் தனித்தியங்க பெற்றோர் ஊக்கம் தரும் முதல் முயற்சி இதுவே. பிள்ளைகள் நம்மை விட்டு விலகிப் போவது போல் தோன்றினாலும் அவர்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இது என்பதை புரிந்துகொண்டு தகுந்த புத்திமதிகளுடன் வாழ்த்தியனுப்புவதே நம் கடமை என்பது புரிந்தாலும் தாயுள்ளத்தின் தவிப்பை எவராலும் மாற்ற இயலாது. அதை நேர்த்தியாய் சொல்கிறது கவிதை. பிள்ளைகள் வளர்ந்தபின் இதைக் காட்டினால் நம்மைப் பார்த்து நகைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதமஞ்சரி, அவர்களின் வாழ்விற்கு இதெல்லாம் தேவைதான். ஆமாம், அவர்கள் நகைக்கும்பொழுது நாமும் சேர்ந்து நகைக்கத்தான் போகிறோம் :)
      உங்கள் கருத்திற்கு நன்றி தோழி!

      நீக்கு
  8. சில நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.. ஆதலால் தாமத வருகை.
    அழகான தவிப்பை உணர்த்தும் வரிகள். நம் குழந்தைகள் பெற்றோராக ஆகும் போதே உணர்வா◌ார்கள். நாமும் அப்படித்தானே உணர்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன சசிகலா, வேலைக்கிடையிலும் வந்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி!
      நீங்கள் சொல்வது உண்மைதான்!

      நீக்கு
  9. //என் பிள்ளை வளர்கிறான்
    என்று புரிந்தேன்!!
    மூளை சொல்வதை ஏற்காத
    உள்ளத்தை என் செய்வேன்!//

    தாயின் தவிப்பை உணர்த்தும் அழகான கவிதை. சூப்பர்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...