சித்திரையே வா! எம் வாழ்வின் சித்திரமே வா! (நூறாவது பதிவு)

 

சித்திரையே வா எம் வாழ்வின் சித்திரமே வா 
சித்தம் எல்லாம் சமாதானம் நிரப்ப வா 
சிந்தனை எல்லாம் சிறக்க வா 
சிரிப்பு எங்கும் உவப்பில் மலர வா 

கன்னல் சுவை வாழ்வில் சேர்க்க வா 
கனி அமுது அனைவர்க்கும் கிடைக்க வா 
கல்லாமையும் இல்லாமையும் நீங்க வா
கள்ளமில்லா அன்பு எங்கும் நிறைய வா  

இனிமையாய் இதம் சேர்க்க வா 
இன்னல் இற்றுப் போக வா 
இனியப் புத்தாண்டை முன்னுரைத்து வா 
இத்தரணி எல்லாம் இன்பம் பொங்க வா 

என் மகன் வகுப்பில் நம் நாடு பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்யப் போயிருந்தேன். காகிதத்தில் தீபம் செய்வதற்கான ஒரு செயல்பாடும் கோலம் ஒன்றை வண்ணமிடும் வண்ணம் அச்சு எடுத்தும் கற்றுக்கொடுத்தேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தது. என் சேலை பற்றியும் பொட்டு  பற்றியும் கேள்வி கேட்டார்கள். மாவிலைக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் இருப்பதைச் சொன்னவுடன் ஆசிரியருக்கு அவ்வளவு ஆச்சரியம்! "மாம்பழம் பிடிக்கும், இனிமேல் இலையும் வாங்குகிறேன்", என்று சொன்னார்கள்! :)

என் மகன் செய்த தீபத்துடனும் வண்ணமிட்டக் கோலத்துடனும், 

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



எனது நூறாவதுப் பதிவைத் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுமாறு  அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதுவும் புத்தாண்டை வரவேற்று!
என் வலைப்பூவை வாசித்தும் கருத்துகளிட்டும் ஊக்கப் படுத்தும் அனைவருக்கும் நன்றி!

14 கருத்துகள்:

  1. "சித்திரையே வா, கிரேஸின் 100வது பதிவை கொண்டாட வா :)"

    அழகான பாடல். இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இது போல பல சதங்களை காணவும் வாழ்த்துக்கள்.

    படங்களும் அபாரம் :)

    பதிலளிநீக்கு
  2. 100 பகிர்வுக்கும், தங்களின் செல்லத்திற்கும் அன்பான வாழ்த்துக்கள்...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் செல்லத்தை வாழ்த்தியதற்கும் அருமையாகப் பதினாறு வகை செல்வங்களைச சொல்லி வாழ்த்தியதற்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  3. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மகனின் திறனை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. எங்கு தொடங்குவேன் எதை வாழ்த்துவேன்...
    அட்டா... அற்புதம் அத்தனையும் ஒன்றாக ஒரே இடத்தில்...

    முதலில்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    அப்புறம் நூறாவது பதிவிற்கு...

    சித்திரையில் தடம் பதித்த இத்தருணமிதில்
    தமிழ்முத்திரையில் சதம்கண்ட வித்தகியே
    நித்தமும் உன்பாக்கள் எங்களுக்கு நீதரும்
    சத்துணவுவன்றோ! படைத்திடு மேலும் ஆயிரம்!...
    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் தோழி!!!
    உங்கள் கவிதையும் மிகச்சிறப்பு!

    உங்கள் அன்புமகனுக்கும் ஆசை முத்தங்கள்! என்னமாதிரி அழகாக வரைந்திருக்கின்றார். அருமை. அழகு!

    அனைவருக்கும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்!
      உங்கள் சத்துணவா என் பாக்கள்!! மகிழ்ச்சியாக உள்ளது, மிகவும் நன்றி! உங்கள் வாழ்த்துகளோடு ஆயிரம் படைக்கலாம்..நன்றி நன்றி!
      மகன் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி
    அருமையான கவிதை . வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துகள் கிரேஸ்..நூறாவது பதிவுக்கும் வாழ்த்துகள்..லட்சம் பதிவுகள் காண வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா! உன் வாழ்த்துகளோடு இலட்சம் காணலாம்...இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. பலநூறு பதிவு இடவேண்டும் நீயும்
    பதிவோடு நீயும் புதிராக வேண்டும்
    கலகலப்பாகவே கழியணும் நாளும்
    கலையோடுதானே மிளிரோணும் என்றும்
    வலையோடுமீனாய் இணையவே நீயும்
    வகை வகையாக வளர்வாய் என்றும்!

    இங்கும் நூறாவது பதிவா ஹா ஹா...... great
    தீபாவளி வாழ்த்துக்கள் தோழி ....!
    அன்பு மகனுக்கும் அனைத்தும் பெற்றுப் பெருக அன்பு வாழ்த்துக்கள்.
    இந்தச் சின்ன வயசில் வரைந்தது அழகோ அழகு கண்ணுக்கு நிறைவாக உள்ளது. நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனம் நிறைந்த வாழ்த்தைக் கண்டு மகிழ்ந்தேன், அதுவும் இனிய பாடலாய்! மகனை வாழ்த்திய அன்பிற்கும் மிக்க நன்றி தோழி


      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...