கொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா?

செய்ய வேண்டியப் பணிகள்
நெடும் பட்டியலாய் நீண்டிருக்க
காலம் சோர்வு இல்லாமல்
தன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க
பகலவன் மகிழ்ச்சியாய் ஒளிவீசி
தன் பணியைச் செம்மையாய் செய்திருக்க
பூமியும் கவலை இன்றி
நிலவுடன் விளையாடிச் சுற்றிக் கொண்டிருக்க
இருளும் மறதி இல்லாமல்
ஓய்வு கொடுக்க எண்ணி வந்துகொண்டிருக்க
குழம்பிப் போயிருப்பது என்னவோ நான் மட்டுமா?
இந்த மனிதர் எல்லாம் என்று சொன்னால்
ஒப்புக் கொள்வீரா? சினம் கொள்வீரா?
சோர்வு, மறதி, வருத்தம் இப்படிப் பல
இவை அனைத்திற்கும் மனிதர் மேல் அபாரக் காதல்
இவை அன்புகொண்டு பார்க்க வர
குழம்புவது என்னவோ மனிதர் தானே?
மனிதருக்கு மட்டும் பல பணிகளா?
காலமே,  பகலவனே, பூமியே, நிலவே, இருளே
கொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா? 

17 கருத்துகள்:

  1. சந்திர கிரகணம் அரங்கேறும்
    இந்நாளில் ...
    தருணத்திற்கேற்ற
    அழகிய கவிதை...

    பதிலளிநீக்கு
  2. அட... என்ன ஒரு சிந்தனை, கேள்வி :) அழகான கவிதை :)

    பதிலளிநீக்கு
  3. வேலைப்பளூவில் உனக்கு மட்டும் தான் கிரேஸ் கவிதை வரும் :-)).. கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  4. அதானே...? நமக்கு மட்டுமா...?

    அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல கற்பனை தோழி! அவர்கள் நம்பணியையும் நாம் அவர்கள் பணியையும் மாற்றிச் செய்தால் எப்படி இருக்கும்....:)

    பதிலளிநீக்கு
  6. நன்றாகத்தான் குழம்பியிருக்கிறீர்கள்! இல்லையென்றால் “பூமியும் கவலை இன்றி நிலவுடன் விளையாடிச் சுற்றிக் கொண்டிருக்க” என்று எழுதுவீர்களா? பூமி, நிலவைச் சுற்றுவதில்லை, அம்மணி! நிலவு தான் பூமியைச் சுற்றுகிறது (என்று எப்போதோ படித்த ஞாபகம். ஒருவேளை இப்போது மாறியிருக்குமோ?) அல்லது நிலவு, பூமி இரண்டுமே சுற்றுவதாக எழுதியிருக்கிறீர்களோ? தலை சுற்றுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழம்பவில்லை திரு.செல்லப்பா அவர்களே..
      பூமியும் கவலை இன்றி
      நிலவுடன் விளையாடிச் ,,, சுற்றிக் கொண்டிருக்க என்று பிரித்துப் படிக்கவும்...நிலவுத் தோழியுடன் விளையாடிக்கொண்டே காதலன் சூரியனைச் சுற்றுகிறாள் பூமி..
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  7. அப்படி இருந்தால்...................ரொம்ப நல்ல இருக்கும் இருக்கு கவிதையும்

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...