கண்ணே மணியே கண்ணுறங்கு (தாலாட்டு)

கண்ணே மணியே கண்ணுறங்கு
தேனே அமுதே கண்ணுறங்கு
செல்லமே (பெயர்) கண்ணுறங்கு
தங்கமே (பெயர்) கண்ணுறங்கு

நிலாவும் மேலே வந்துடுச்சு
சூரியன் தூங்கப் போயிடுச்சு
கண்ணே நீயும் கண்ணுறங்கு
செல்லமே (பெயர்) கண்ணுறங்கு

பறவையும் கூட்டில் தூங்கிடுச்சு 
மானும் முயலும் உறங்கிடிச்சு 
கண்ணே நீயும் கண்ணுறங்கு 
செல்லமே (பெயர்) கண்ணுறங்கு 

காலையில் கதிரை வரவேற்க 
கண்ணே இப்போ நீ தூங்கு 
பறவை கூட பாடிடவே 
செல்லமே இப்போ நீ தூங்கு


(பெயர்) என்று இருக்கும் இடங்களில் குழந்தையின் பெயர் போடவும்.

வாய்க்கு வந்ததைப் பாடிக்கொண்டிருந்தேன்..இரண்டு நிமிடத்தில் உறங்கிவிட்டான்..நல்ல தாலாட்டா இல்லை நான் பாடுவதை நிறுத்துவதற்கா என்று தெரியவில்லை!!

12 கருத்துகள்:

  1. எளிமையான அழகான தாலாட்டு. அவன் இரண்டே நிமிடத்தில் தூங்கியதில் ஆச்சிரியம் ஏதுமில்லை :-)

    பதிலளிநீக்கு

  2. நிசமாவே தூங்கிடுச்சுங்க.. ஆமாங்க எங்க பேரப்புள்ள...

    தாலாட்டு பாட்டை பாடிட்டெ இருந்தேன் பாருங்க...
    இந்தப்புள்ள அதுவரைக்கும் சிணுங்கிக்கினே இருந்தவன்
    சட்டுனு சீக்கிரமா உறங்கிட்டானுங்கோ...

    அப்படி என்னங்க இந்த வார்த்தைகளிலே தேனைகலந்து வச்சு இருக்கீக.. !!

    என்ன பாடுறத கேட்கணுமா...!!

    கொஞ்சம் பொறுத்துக்கங்க... யூ ட்யூபிலேயும் கூகிள்ளேயும் என்னோட வலையிலேயும்
    கிரேஸ் பாட்டு இது.அப்படின்னு போடறேன்.

    நாளைக்கு எல்லா வூட்டிலேயும் உங்க தாலாட்டு பாட்டு தான்னேன்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பேரப்புள்ள உறங்கவும் என் பாட்டு பயன்பட்டுச்சா? ரொம்ப மகிழ்ச்சிங்க!

      என் பாட்ட பாடி யூ டூப்லயும் கூகிள்ளேயும் உங்க வலைத் தளத்திலும் கிரேஸ் பாட்டுன்னு போடுவதாகச் சொன்னதற்கு நன்றிங்க சுப்புத் தாத்தா. நிறைய பேருக்கு என் பாட்டு பிடிச்சா மகிழ்ச்சிதானே!

      நீக்கு
  3. அருமை! அழகான தாலாட்டுக்கவிதை தோழி!
    சுப்பு ஐயாவும் பாடிப் பதிகிறேன் என்றிட்டார்...நன்றிகள் ஐயா உங்களுக்கும்!

    சிறப்பான சொற்கட்டுப்பிரயோகம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    கண்மணிக்கு தாலாட்டுக் கவிதந்தாய் கண்ணுறங்கு
    கவிமணிக்கு பாராட்டு நாந்தாரேன் கண்ணுறங்கு
    விண்மணி வந்திடிச்சு விரைவாய்நீ கண்ணுறங்கு
    பொன்னிறகால் உன்பாவை பொறிக்கின்றேன் கண்ணுறங்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி இளமதி!
      உங்கள் கவிதைத் தாலாட்டு அமர்க்களம், நன்றி தோழி!

      நீக்கு
  4. பல பேர்கள் மறந்து போன தாலாட்டு...

    வரிகள் அருமை...

    தாத்தா சும்மா சொல்ல மாட்டார்... விரைவில் அவர் தளத்தில் உங்கள் பாடலை கேட்கலாம்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! ஆமாம், தாத்தா பாடுவதைக் கேட்க ஆவலாக உள்ளேன்.

      நீக்கு
  5. https://plus.google.com/107759285475612324039/posts
    சுப்பு தாத்தா இந்தப் படலை அழகாகப் பாடி இந்த தளத்தில் இட்டுள்ளார்கள்..நன்றி சுப்பு தாத்தா!
    மகிழ்ச்சி! நன்றி பல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் கிரேஸ்.

      நீக்கு
    2. அற்புதம்.. வாழ்த்துக்கள் கிரேஸ் :). உங்க கவிதைக்கு ஒலி வடிவம் கிடைச்சிருச்சு :)

      சுப்பு தாத்தா அவர்கள் பாடிய விதமும் அருமை.:)

      நீக்கு
  6. என்ன ஆச்சரியம் கிரேஸ்.. படிக்கிறப்பவே எனக்குத் தூக்கம் வந்திடுச்சு.. :-)))

    கேலி போதும்.. அருமையான வரிகள்..வாழ்த்துகள் கிரேஸ்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...