இதயமில்லாதவன்
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
அவனுடைய ஒரு புன்னகையில்
சுற்றுப்புறம் எங்கும் ஆயிரம் மலர்கள்
காற்றில் பரவும் நறுமணம்
மனதில் பல ஆயிரம் இராகங்கள்
கோபம் என்ற ரசம் கூடத் தள்ளிப் போய்விடுகிறது
ஆனால்
அவன் புன்னகை செய்யாவிட்டால்
நிலவொளியும் சுடுகிறது
தேனும் கசக்கிறது
இன்னிசையும் இரைச்சலாய்க் கேட்கிறது
யாரைப் பார்த்தாலும் கோபம் பொங்குகிறது
இதயமில்லாதவன்
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
ஒரு புன்னகை செய்தால்
குறைந்தா போய்விடுவான்!
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
அவனுடைய ஒரு புன்னகையில்
சுற்றுப்புறம் எங்கும் ஆயிரம் மலர்கள்
காற்றில் பரவும் நறுமணம்
மனதில் பல ஆயிரம் இராகங்கள்
கோபம் என்ற ரசம் கூடத் தள்ளிப் போய்விடுகிறது
ஆனால்
அவன் புன்னகை செய்யாவிட்டால்
நிலவொளியும் சுடுகிறது
தேனும் கசக்கிறது
இன்னிசையும் இரைச்சலாய்க் கேட்கிறது
யாரைப் பார்த்தாலும் கோபம் பொங்குகிறது
இதயமில்லாதவன்
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
ஒரு புன்னகை செய்தால்
குறைந்தா போய்விடுவான்!
அசத்தல் கிரேஸ். காதலை அன்பா சொல்லி கேட்டு இருக்கேன். கோபமா சொல்லி இப்ப தான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஇதோ கிளம்பிட்டேன் உங்கள் அவனிடம் இது பற்றி நியாயம் கேட்க :-)
நன்றி ஸ்ரீனி! கேளுங்க கேளுங்க நல்ல கேளுங்க :)
நீக்குபுரியாதவனுமல்ல,
பதிலளிநீக்குபுன்னகைக்க அறியாதவனும் அல்ல,
புன்னகை மறைத்து நடத்தும்
பாசாங்கு நாடகத்தின்
பலனறியாதவனும் அல்ல,
கலங்கும் இதயம் எழுதும்
கவிதையில் காணவேண்டுமாம்
துலங்கும் காதலி(யி)ன் வீரியம்!
அப்படித்தானே? ம்..ம்..அப்படித்தான் இருக்கும்...
அழகான கவிதைக்குப் பாராட்டுகள் கிரேஸ்.
உங்கள் கவிதை அருமை கீதமஞ்சரி!
நீக்குபாராட்டுக்கு நன்றி!
உடனே பெரு பாட்டு இந்த புன்னகை என்ன விலை , என்று சந்தோசமாய் கேட்கலாமே
பதிலளிநீக்குநல்ல ஆலோசனை தான்! நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!
நீக்குஅருமை
பதிலளிநீக்குபுரிந்து கொண்டவன் மனிதனாகிறான்
பிரச்சனைகளற்ற மனிதனாகிறான்
மிகச் சின்ன விஷயம்
இதைப் புரிந்து கொள்ளவேண்டும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
உண்மை, புரிந்து கொண்டவனுக்குப் பிரச்சினை இல்லை!
நீக்குவாழ்த்துக்கு நன்றி திரு.ரமணி அவர்களே!
அவன் புன்னகை என்ன விலை
பதிலளிநீக்குஅது உன் இதயம் சொல்லும் விலை
வாங்கிவிடுங்கள் கவிதையால்
வாங்கிவிட்டேன் :), நன்றி பூவிழி!
நீக்குஅதானே... இப்படியா செய்வது...?
பதிலளிநீக்குபுரிந்து கொள்ள வைக்க தெரியாத எனக்கு, என்னை முதலில் புரிந்து வைத்துக் கொள்ள தெரியவில்லையே...? என்ன செய்வது...?
இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? சென்று புன்னகைத்து விடுங்கள் திரு.திண்டுக்கல் தனபாலன்! :)
நீக்குகிரேஸ்.. புன்னகை செய்தப்பின் இன்னொரு கவிதை எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குகொஞ்சம் கடினம்தான் தியானா! :)
நீக்கு