என் மகனுக்கு இரண்டரை வயது இருக்கும் பொழுது ஒரு நாள் கதை கேட்டான். நானாக ஏதோ சொல்ல ஆரம்பித்து அவன் போக்குக்கு திசை மாறி
நகைச்சுவையாக மாறிய கதையை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தேன்...அக்கதை மொழிமாற்றம் செய்து இங்கே...சிவப்பு வண்ணத்தில் இருப்பது கதை..நீல வண்ணத்தில் இக்கதையின் கதை!!
ஒரு வெயில் நாளில், ஒரு குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு குதிரை வடிவ மேகத்தைப் பார்த்தது. உடனே குதிரை மேகத்தைப் பார்த்துக் கனைத்தது. மேகக்குதிரை எங்கே போகிறது என்று கேட்டது. அதற்கு மேகக்குதிரை சொன்னது, "உலகம் சுற்றப் போகிறேன்". புல்வெளியில் இருந்த குதிரை, "நானும் வரட்டுமா?" என்று கேட்டது. மேகக்குதிரையும் குதிரையும் நகர ஆரம்பித்தன.
அப்பொழுது ஒரு ஆப்பிள் படத்தைப் பார்த்த என் மகன், "ஆப்பிள் கதை சொல்லு" என்றான். அதனால் கதையில் ஒரு திருப்புமுனை...
சிறிது தூரம் சென்றவுடன் குதிரைக்குப் பசித்தது. அங்கு சில ஆப்பிள் மரங்களைப் பார்த்த குதிரை, ஒரு ஆப்பிள் பறித்து சாப்பிட்டது.
இங்கு என் மகன், "ஆப்பிள கடிச்சவுடனே காக்கா வந்துச்சு"!! என்றான். என்ன!!! காக்காவா???!!! என்றேன். உடனே அவன், "குட்டிக் காக்கா அம்மா", என்றான் குறும்புப் புன்னகையுடன். இருவரும் சிரித்துக்கொண்டே கதையை தொடர்ந்தோம்.
குதிரை இன்னொரு ஆப்பிள் பறித்துக் கடித்தவுடனே ஒரு காக்கா வெளியில் வந்தது. ஆப்பிளிலிருந்து காக்கா வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குதிரை திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ரொம்ப தூரம் ஓடியபின் மூச்சிரைக்க நின்ற குதிரை ஒரு மரத்தில் ஒரு காக்காவைப் பார்த்தது. உடனே குதிரை சொன்னது, "நீ ஆப்பிளிலிருந்து வந்தாய் என்று எனக்குத் தெரியும்". கோபமுற்ற காக்கா, "நீ என்ன முட்டாளா?" என்று கேட்டுவிட்டுப் பறந்து சென்றது. குதிரை கேட்டதை மற்ற காக்காக்களிடம் சொன்னது. அனைத்துக் காக்கைகளும், "முட்டாள் குதிரை, முட்டாள் குதிரை" என்று கத்த ஆரம்பித்தன. குதிரைக்கு ரொம்ப கோபம் வந்ததால் காக்கைகளை ஒரு உதை உதைத்தது. உதை வாங்கிய காக்கா வலியில் "க்கா" என்று கத்தியது. அப்போதிலிருந்து எல்லா காக்கைகளும் "கா! கா! கா!" என்று கத்துகின்றன!!!
நானும் என் மகனும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். தருக்கம் ஏதும் இன்றி சிரிக்க மட்டுமே இக்கதை. :) குதிரை பேசும் இடங்களில் குதிரை போல கனைத்தும் காக்கா பேசும் இடங்களில் காக்கா போலக் கரைந்தும் சொன்னால் பிள்ளைகளுக்கு குதூகலம் தான்!
ஆயிரத்தோரு இரவுக் கதைகள் இப்படி ஆரம்பித்தவை தான்! வாழ்க உங்கள் மகன்!
பதிலளிநீக்குஆமாம், ஆயிரத்தொரு கதைகள் கடினம், நூறாவது எழுதுகிறேனா என்று பார்ப்போம்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிஞர் இராய.செல்லப்பா!
நீக்குசிறுவர்கள் கதை கேட்கிறார்களே என்று தவறான உத்தரனமாகி விடக் கூடாது.கதை அருமை
பதிலளிநீக்குநன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!
நீக்குநல்ல கற்பனைத் திறன் கிரேஸ்.. ஏன் காக்கா, "க்கா" னு கத்துதினு இப்பத் தான் தெரியுது..:-))
பதிலளிநீக்குநன்றி தியானா! தெரிஞ்சுகிட்டயா? சந்தோசம் :))
நீக்கு'Grace' கிட்ட இருந்து ஒரு பதிவை சுட்டுடீங்கலே கிரேஸ் :-). நல்ல தமிழாக்கம். கதைக்கு ஏற்ற படமும் :)
பதிலளிநீக்குஹாஹா 'Grace' கிட்ட மட்டும் சொல்லிடாதிங்க :)
நீக்குகுழந்தைகளின் உலகில் நுழைவது மிகவும் கடினம். நுழைந்துவிட்டோமென்றால் வெளியே வர மனமே வராது. வழியும் தெரியாது. அவர்களுடைய கற்பனைக்குத் தீனி போடுவது போன்ற கதைகளையே விரும்புகிறார்கள். என் பிள்ளைகளுக்கும் கதை சொன்ன காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்குகதையும் கதை சார்ந்த சம்பவங்களும் சூழலும் அருமை கிரேஸ்.
உண்மைதான் கீதமஞ்சரி! குழந்தைகளின் கற்பனைக்கு அளவே இல்லை..வியக்க வைக்கிறது!
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஐ நல்ல நானும் சுவாரசியமா படிச்சிகிட்டு இருக்கும் போது கற்ப்னையை நிறுத்திடீங்க போங்க முடிந்தால் தொடரரும் போடுங்க
பதிலளிநீக்குஅச்சோ அப்படி செய்து விட்டேனா? தொடரும் போட்டால் போச்சு..
நீக்குநன்றி பூவிழி :)
Superb Madam. It is really new version...Nice writing. Best of luck!
பதிலளிநீக்குPudhuvai Ra. Rajani,
Editior,
Vidiyal Ilakkiya Ithaz.
Pondicherry.
Thank you so much, sir. Happy that you have visited my blog and commented on this story.
நீக்குNice story 👌 my kid enjoyed this story with the same happiness and excitement
பதிலளிநீக்கு