வருக வசந்தமே!

வசந்தமே நீ  வாராயோ 
என்று அழைத்தேன் 
வந்ததோ என் குரலைக் கேட்டு 
சவுக்கு மரங்கள் 
மஞ்சள் கம்பளம் விரித்து 
வசந்தத்தை வரவேற்கின்றனவோ 
குளவிகளும் சுற்றி சுற்றி வருகின்றனவே 
வாகனங்கள் சாலைகள் 
கதவுகள் சன்னல்கள் 
எங்கும் மஞ்சள் வண்ணம் 



எங்கு தொட்டாலும் 
கரங்கள் மங்களகரம் 
இது வரைக்கும் பரவாயில்லை 
ஆனால் 
மூக்கினுள்ளுமா மஞ்சள் தூவ வேண்டும்?
இனியெங்கும் கேட்கும் 
மகரந்த ஒவ்வாமை என்ற சொல்!
ஆனாலும் உன் வண்ணங்கள் அழகு
உன் இளஞ் சூடு இனிது 
வருக வசந்தமே!

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன் அவர்களே!

      நீக்கு
  2. படங்களுக்கேற்ற வரிகளா...? இல்லை வரிகளுக்கேற்ற படங்களா...?

    வருக வருக வசந்தமே என்றும் வருக....

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
      வரிகளுக்கு ஏற்ற படங்கள் ஐயா, எழுதிவிட்டுச் சென்று படம் எடுத்தேன் :)

      நீக்கு
  3. மஞ்சள் தூவி
    மங்களகரமாய்
    வசந்தத்தை வரவேற்கிறது -
    இயற்கை !!!

    வசந்தத்தை வரவேற்கும் கவிதை அருமை சகோதரி !!!

    பதிலளிநீக்கு
  4. வஸந்தம் வரட்டும்
    மகிழ்வு பரவட்டும்
    கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அனைவருக்கும் வாழ்வில் வசந்தம் வரட்டும்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ரமணி!

      நீக்கு
  5. கவியோ அழகு. பயமோ பெரிது...
    வாழ்த்துக்கள் தோழி!

    வசந்தமே அருகில்வாவென வந்தவளை வரவேற்க
    வாசனைநுகரும் நாசியும் தன்வசமிழந்து போகிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி இளமதி!

      ஆமாம், நுகர ஆசைதான்..மூக்கில் மழை தொடங்கிவிடுமோ என்று பயத்துடன் :)

      நீக்கு
  6. வசந்தம் வந்ததில் மகிழ்ச்சி கிரேஸ்..மஞ்சள் போர்த்திய படங்களும் அருமை..

    பதிலளிநீக்கு
  7. '..இனியெங்கும் கேட்கும்
    மகரந்த ஒவ்வாமை என்ற சொல்!
    ஆனாலும் உன் வண்ணங்கள் அழகு
    உன் இளஞ் சூடு இனிது
    வருக வசந்தமே!..''
    வரட்டும் வசந்தம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. வசந்தத்தின் "மங்களகரமான" வருகையை வரவேற்கும் அழகான கவிதை கிரேஸ்.

    //எங்கு தொட்டாலும்
    கரங்கள் மங்களகரம்
    இது வரைக்கும் பரவாயில்லை
    ஆனால்
    மூக்கினுள்ளுமா மஞ்சள் தூவ வேண்டும்?// - நல்லா கேளுங்க :-)

    கொஞ்சம் அதீதமாகத் தான் மஞ்சள் பொடி போட்டு இருக்கு. என் கருப்பு நிற காரும், மஞ்சள் நிற காராக மாறி போய் விட்டது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா, சிறிது நாளைக்குப் புது வாகனம் என்று நினைத்துக்கொள்ளுங்கள், ஊரில் அனைவருக்கும் ஒரே வண்ண வாகனம்! இயற்கை எப்படி சமன்படுத்துகிறது பாருங்கள்! :)

      நீக்கு
  9. இந்த வசந்தகாலம் வந்தாலே ஒவ்வாமைத் தொல்லைதான். என்ன செய்வது? கண்களுக்கு விருந்து தரும் காலம், நாசிக்கும் நுரையீரலுக்கும் மருந்து கேட்கிறதே...

    கவிதை அருமை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.
      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதமஞ்சரி!

      நீக்கு
  10. நல்ல கவிஞர்களை ஊக்குவிப்பதில் வசந்தத்தின் வரவுக்கு இணையேது? வாழ்த்துக்கள். –கவிஞர் இராய. செல்லப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞர் இராய.செல்லப்பா அவர்களே!

      நீக்கு
  11. வருக வசந்தமே !!
    பருக இந்த தேனினை

    பட்டுப்பாய் விரித்து
    பாங்காய் உமை உபசரித்து

    தித்திக்கும் தெள்ளமுதை
    தேன்மதுரத் தமிழோசையுடன்
    கலந்து தரவே
    கிரேஸ் இங்கே
    காத்திருக்கிறாள்

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேன்மதுரத் தமிழோசையுடன்
      கலந்து தரவே
      கிரேஸ் இங்கே
      காத்திருக்கிறாள்// அட, அட, அருமை தாத்தா!
      அருமையான கவிதையில் பாராட்டு! மிக்க நன்றி சுப்பு தாத்தா!

      நீக்கு
  12. வசந்தம் வந்ததில் வண்ணம் பூசின படங்களும் கவியும் அழகு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...