நூறாவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூறாவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சித்திரையே வா! எம் வாழ்வின் சித்திரமே வா! (நூறாவது பதிவு)

 

சித்திரையே வா எம் வாழ்வின் சித்திரமே வா 
சித்தம் எல்லாம் சமாதானம் நிரப்ப வா 
சிந்தனை எல்லாம் சிறக்க வா 
சிரிப்பு எங்கும் உவப்பில் மலர வா 

கன்னல் சுவை வாழ்வில் சேர்க்க வா 
கனி அமுது அனைவர்க்கும் கிடைக்க வா 
கல்லாமையும் இல்லாமையும் நீங்க வா
கள்ளமில்லா அன்பு எங்கும் நிறைய வா  

இனிமையாய் இதம் சேர்க்க வா 
இன்னல் இற்றுப் போக வா 
இனியப் புத்தாண்டை முன்னுரைத்து வா 
இத்தரணி எல்லாம் இன்பம் பொங்க வா 

என் மகன் வகுப்பில் நம் நாடு பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்யப் போயிருந்தேன். காகிதத்தில் தீபம் செய்வதற்கான ஒரு செயல்பாடும் கோலம் ஒன்றை வண்ணமிடும் வண்ணம் அச்சு எடுத்தும் கற்றுக்கொடுத்தேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தது. என் சேலை பற்றியும் பொட்டு  பற்றியும் கேள்வி கேட்டார்கள். மாவிலைக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் இருப்பதைச் சொன்னவுடன் ஆசிரியருக்கு அவ்வளவு ஆச்சரியம்! "மாம்பழம் பிடிக்கும், இனிமேல் இலையும் வாங்குகிறேன்", என்று சொன்னார்கள்! :)

என் மகன் செய்த தீபத்துடனும் வண்ணமிட்டக் கோலத்துடனும், 

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



எனது நூறாவதுப் பதிவைத் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுமாறு  அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதுவும் புத்தாண்டை வரவேற்று!
என் வலைப்பூவை வாசித்தும் கருத்துகளிட்டும் ஊக்கப் படுத்தும் அனைவருக்கும் நன்றி!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.