அஞ்சுவர எண்ணுவதற்குள்
அஞ்சு பேரு ஒளிந்துக் கொள்ள
அஞ்சுவர விளையாட்டை விட்டு
அஞ்சு பேரத் தேட விட்டு
அஞ்சுவர எண்ணி அம்மாவிடம் சேர்ந்தேன்!
சொற்பொருள்:
அஞ்சுவர - ஐந்து வரை;
அஞ்சுவர - அச்சம் வர;
விளக்கம்: ஐந்து வரை எண்ணுவதற்குள் ஐந்து நண்பர் ஒளிந்து கொள்ள, அச்சம் வர கண்ணாமூச்சி விளையாட்டை விட்டுவிட்டு, ஐந்து வரை எண்ணிக்கொண்டே அம்மாவிடம் ஓடி விட்டேன், அந்த ஐந்து நண்பரும் என்னைத் தேட விட்டு!
அஞ்சுவர என்றால் அச்சம் தோன்ற என்று வாசித்தேன்.
இரு அஞ்சுவர எண்ணுவதற்குள் இதை எழுதி விட்டேன்
மூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லுங்கலேன்! :-)
அஞ்சு பேரு ஒளிந்துக் கொள்ள
அஞ்சுவர விளையாட்டை விட்டு
அஞ்சு பேரத் தேட விட்டு
அஞ்சுவர எண்ணி அம்மாவிடம் சேர்ந்தேன்!
சொற்பொருள்:
அஞ்சுவர - ஐந்து வரை;
அஞ்சுவர - அச்சம் வர;
விளக்கம்: ஐந்து வரை எண்ணுவதற்குள் ஐந்து நண்பர் ஒளிந்து கொள்ள, அச்சம் வர கண்ணாமூச்சி விளையாட்டை விட்டுவிட்டு, ஐந்து வரை எண்ணிக்கொண்டே அம்மாவிடம் ஓடி விட்டேன், அந்த ஐந்து நண்பரும் என்னைத் தேட விட்டு!
அஞ்சுவர என்றால் அச்சம் தோன்ற என்று வாசித்தேன்.
இரு அஞ்சுவர எண்ணுவதற்குள் இதை எழுதி விட்டேன்
மூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லுங்கலேன்! :-)
எப்படி கிரேஸ் .. கலக்குறீங்க போங்க :) ..
பதிலளிநீக்கு"அஞ்சு வரியில்.. அஞ்சுவர கவிதை அருமை"...
//மூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லுங்கலேன்! :-)// -- சொல்லிட்டோம்ல :)
நன்றி ஸ்ரீனி! அஞ்சு வரி என்பதை நீங்கள் சொல்லிதான் பார்த்தேன். அப்படி அமைந்து விட்டது :)
நீக்குரசிக்க வைக்கும் விளையாட்டு...
பதிலளிநீக்குமூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லி விட்டேனா...?
நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! ஆமாம், இரு அஞ்சுக்குள் சொல்லி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் :)
நீக்குஅருமை...நல்ல கவிதை. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் தோழி!
பதிலளிநீக்குஅப்படியே என் மொக்கையையும்....:)
அஞ்சுமாலி வரவுகண்டு
அஞ்சுகமும் கொஞ்சிடுதே..
அஞ்சுகரத்தோன் துணையுடன்
அஞ்சுவனம் சொல்லிடவே உன்
அஞ்சுதல் அகன்றிடுமென்றாள் அன்னை...
அஞ்சுமாலி- சூரியன், அஞ்சுகம்- கிளி
அஞ்சுகரத்தோன் - ஐந்துகரத்தோன் விநாயகன்
அஞ்சுவனம் - பஞ்சாக்ஷர மந்திரம். ந ம சி வா ய
அஞ்சுதல் - பயப்படுதல்
நன்றி தோழி இளமதி! உங்கள் கவிதையும் நன்றாய் உள்ளது, மொக்கை இல்லை :)
நீக்குஅஞ்சு வரிக்குள் ஒரு மிக பெரிய விளையாட்டே ஒளிந்து கிடக்கு கண்ணாமூச்சியாய்
பதிலளிநீக்குஆமாம் பூவிழி :)
நீக்குநன்றி!
அருஞ்சுவைக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குதங்கள் தளம் பார்க்கமுடியவில்லையே...விளம்பரம் முன்னே வந்து கொண்டேயிருக்கிறதே..
Oh..I missed the fun game..
பதிலளிநீக்குCute little poem Grace.. As far as I know, only you can think like this..
இல்லை தியானா, நேர வரைமுறை இல்லை, பதினைந்து வரை எண்ணுவதற்குள் தான்...
நீக்குநன்றி நன்றி தியானா :)