வசந்தமே நீ வாராயோ
இலைக் கூரை நீ தருவாயென்றே
சிட்டுக் குருவியும் குச்சி வீடு கட்டியதே
வாராமல் நீ இருப்பதால்
புரியாமல் தவிக்குதே
இலைகளைப் புறம் அனுப்பலாமா என்றே
மரங்களும் குழம்புதே
குளிரால் பல திங்கள் உறங்கும் உயிரினங்கள்
விழித்து எழ வேண்டாமா?
சிறுது உண்ணவும் வேண்டாமா?
குளுமை விடைபெற்றுச் சென்றதே
இவ்விடம் விட்டுச் செல்ல மனசில்லையோ
இரண்டே நாளில் திரும்பி வந்ததே!
பருவ காலங்கள் குழம்புவதேன்?
அத்தனைக் கேடு செய்து விட்டோமா புவிக்கு!!
உடல் குளிருதே உள்ளம் தவிக்குதே
வசந்தமே நீ வாராயோ!
இலைக் கூரை நீ தருவாயென்றே
சிட்டுக் குருவியும் குச்சி வீடு கட்டியதே
வாராமல் நீ இருப்பதால்
புரியாமல் தவிக்குதே
இலைகளைப் புறம் அனுப்பலாமா என்றே
மரங்களும் குழம்புதே
குளிரால் பல திங்கள் உறங்கும் உயிரினங்கள்
விழித்து எழ வேண்டாமா?
சிறுது உண்ணவும் வேண்டாமா?
குளுமை விடைபெற்றுச் சென்றதே
இவ்விடம் விட்டுச் செல்ல மனசில்லையோ
இரண்டே நாளில் திரும்பி வந்ததே!
பருவ காலங்கள் குழம்புவதேன்?
அத்தனைக் கேடு செய்து விட்டோமா புவிக்கு!!
உடல் குளிருதே உள்ளம் தவிக்குதே
வசந்தமே நீ வாராயோ!
அன்புத்தோழி...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்!
வருந்தும் உயிருக்கெல்லாம்
வசந்தம் வந்தால் போதுமோ
வாழ்நாள் முழுவதுமே
வசந்தம்தான் தாய்நாட்டில்
வறுமை பிணிபஞ்சம்
கொடுமையிலும் கொடுமை
கொல்கின்றனர் எம்முயிரை
வசந்தம் வந்தாலும் என்றும்
வாழ்வென்பது இல்லையங்கே....
என்மன வலியைக் கூறினேன். தவறாக எண்ண வேண்டாம்...
நன்றி தோழி இளமதி!
நீக்குஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது. இயற்கையில் மட்டுமா வசந்தம் வேண்டும்? வாழ்விலும் வேண்டும் அல்லவா?
அங்கும் வசந்தம் விரைவினில் வரும். மன உறுதியுடன் இருங்கள்!
இதில் தவறாக எண்ண ஒன்றுமில்லை.
அருமை. அருமை... காலத்திற்கு ஏற்ற கவிதை... ஏப்ரலாகியும் இந்த குளிர் போகாம 'torture' பண்ணுது :(
பதிலளிநீக்குநல்ல கவிதை... பூமியின் தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கு நாமே காரணம் என்ற உண்மை சட்டென்று ஞாபகத்துக்கு வந்துபோகிறது...
பதிலளிநீக்குநன்றி ஸ்கூல் பையன் அவர்களே!
நீக்குஆமாம்.. :(
அருமை....
பதிலளிநீக்குவிரைவில் அனைவரின் வாழ்விலும் வசந்தம் வரட்டும்...
தொடர வாழ்த்துக்கள்...
கிரேஸ்.. இங்கு வசந்தம் வந்திடுச்சு நினைகிறேன்.. வரும் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து வெயில்..
பதிலளிநீக்குவசந்தத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வாழ்த்துக்கள் தியானா!
நீக்கு