அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

புலியை முறத்தால் அடித்து விரட்டலாம்
பசுத்தோல் போர்த்திய புலியை?

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை என்று கற்றது ஏட்டுச் சுரைக்காயா?

அநியாயத்தை தட்டிக் கேட்க அஞ்சி
ஏற்றுச் செல்வதே உண்மை நிலையா?

மனம் வெறுத்து அற்றுப் போகிறதே
பாரதியையும் அவ்வையாரையும் கற்பிக்க

நீதி நூல்கள் அத்தனை இருக்க
அதற்கு மேலும் அநியாயங்கள் இருக்கே

பொங்கும் உள்ளத்தை மற்றவர் அறிவுரைபடி
அப்படித்தான் என்று அடக்க முடியவில்லையே

நான் தவறா சமுதாயப் போக்கு தவறா
அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

பாரதியே வாராயோ
குழப்பத்தை தீராயோ....



12 கருத்துகள்:

  1. இன்னொரு முறை ஒரு பாரதி பிறந்தால் அழகாகத் தான் இருக்கும்...

    நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  2. நான் தவறா சமுதாயப் போக்கு தவறா
    அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

    பாரதியே வாராயோ
    குழப்பத்தை தீராயோ..../// வரட்டும்..

    பதிலளிநீக்கு
  3. அக்னிக் குஞ்சை நம் மனதில்
    முதலில் வைப்போம்
    காலச் சூழலில் அதை
    அணையாது காப்போம்
    பின் வைக்கவேண்டிய இடத்தில்
    மொத்தமாய் வைப்போம்
    மனம் தொட்ட கவிதைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம் அப்படித்தான் செய்ய வேண்டும்போல ஐயா. மொத்தமாய் வைக்க வேண்டிய நாள் விரைவில் வரட்டும்..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  4. அநீதீயை காணும் இடமெலாம் வைக்கலாம் என்பது என் கருத்து சரியாங்க ?

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் பாரதி வந்தாலும் குழம்பித்தான் போவான்..ஆனால் அநீதி வெகு நாள் இருக்க முடியாது கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  6. நெத்தியடி கேள்விகள்.. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...