குறுந்தொகைப் பாடல் 95, கபிலர் பாடியது
" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் வித்தன்றே"
தீ ஓரன்ன என் உரன் வித்தன்றே"
எளிய உரை: விண்ணைத்தொடும்
மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில்
நிறைந்து எதிரொலிக்கும், பல மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற
தோள்களையுடைய குறவனின் இளம் மகள், நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள்,
நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே!
விளக்கம்: நீரைப் போன்ற மென்மையான குணம்கொண்ட பெண் நெருப்பைப் போன்ற தன் தின்மையைக் குறைத்து அணைத்துவிட்டாளே என்று தன் மனதை ஈர்த்தப்
பெண்ணைப் பற்றித் தலைவன் தோழனிடம் சொல்கிறான். காதலில் அவனுடைய முரட்டுக்குணம் தொலைந்துபோனதோ? எப்படி இருந்த நான் இப்படியானேன் என்று தோழனிடம் சொல்கிறானோ?
சொற்பொருள்: மால்வரை - விண்ணைத்தொடும் மலை, இழிதரும் - பாயும், தூ வெள் அருவி - தூய வெண்மையான அருவி, கல்முகை - கற்குகை, ததும்பும் - நிறையும், பன் மலர் - பல மலர்கள், சாரல் - மலைச்சரிவு, சிறு குடி குறவன் - சிறிய குடியிருப்பின் குறவர் தலைவன், பெருந்தோள் - அகன்ற தோள், குறுமகள் - இளம்பெண், நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற குணம், தீ ஓரன்ன - நெருப்பைப் போன்ற, என் உரன் வித்தன்றே - என் தின்மை குலைத்துவிட்டாளே
என் பாடல்:
"மலையிலிருந்து குதித்தோடும் வெண்மையான அருவி
கல் குகைகளில் எதிரொலிக்கும் பன்மலர்ச் சாரல்
வாழும் சிறுகுடிக் குறவன் மகள்
நீரைப் போன்ற குணமுடையாள்
நெருப்பைப் போன்ற என்னை அணைத்தாளே"
சொற்பொருள் விளக்கம் மிகவும் அருமை...
பதிலளிநீக்குஉங்களின் பாடலுக்கு வாழ்த்துக்கள்...
"பையா" பாட்டு :
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச் சுடச் சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்கத் தோன்றும்...
பேரை கேட்கத் தோன்றும்...
பூபோல் சிரிக்கும்போது - காற்றாய் பறந்திட தோன்றும்...
செல்...செல்...அவளுடன் செல் -
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் -
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
மிக்க நன்றி திரு.தனபாலன்..
நீக்குஅருமையான பாடல்..//அழகாய் மனதைப் பறித்துவிட்டாளே // நன்றாகப் பொருந்துகிறதே..
எப்படித்தான் பாடல் எல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்களோ :)
வலைப் பதிவினில் குறுந்தொகை விளக்கம்!
பதிலளிநீக்குபடிக்கத் தெவிட்டாத தமிழ் இன்பம்!
உங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி ஐயா!
நீக்குவணக்கம் அக்கா...
பதிலளிநீக்குகுறுந்தொகை கபிலரின் பாடலை சிறப்பாக விளக்கம் அளித்து ஆதற்கான வார்பிலக்கியத்தையும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்...
பாராட்டுகள்...
நீரைப் போன்ற குணமுடைய குறத்தி மகள் நெருப்பைப் போன்ற குணமுடைய என்னை அனைத்தாளா அல்லது அணைத்தாளா?????
வணக்கம் வெற்றிவேல், மிக்க நன்றி!
நீக்கு'அணைத்தாள்' தான்.
பெரும் அழகை உடைய குறத்தி மகளை அனைத்த போது நெருப்பாய் எரிந்து கொண்டிருந்த எனது உள்ள ஆசைத் தீவு அணைந்து போயிற்று என்றும் பொருள் கொள்ளளாம் தானே???
பதிலளிநீக்குஇது புதுப் பொருளாக இருக்கிறது..உங்க வீட்ல கவனிக்கச் சொல்லணும்..
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபாடலும் அருமை பொருள் விளக்கமும் நன்று அந்த காலத்து பாடல்கள் இந்தகாலத்துக்கும் உகந்தது....
தங்களின் பாடலும் சிறப்பு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
நீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!
அருமையான பகிர்வு ... தேடி தேடி சங்க பாடல்களையும், அதற்கான விளக்கத்தையும் பகிரும் தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது ... தொடர்ந்து கலக்குங்க கிரேஸ் :)
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீனி!
நீக்குஅருவிக்கரையில் அமர்ந்து படிப்பது போலவும்
பதிலளிநீக்குசமயங்களில் அருவியில் நனைந்தபடி படிப்பது போலவும் ஒரு மாயா உலகை ஏற்படுத்துது கவிதை ! கலக்குடா செல்லம்!
அப்படியா? மகிழ்ச்சி :)
நீக்குநன்றி தோழி!
நல்ல இருக்கு
பதிலளிநீக்குடிடி அண்ணாவின் சேட்டை அருமை..
ஏங்க டிடி கபிலர் பாடு உங்களுக்கு பையா பாட்டை நினைவூட்டுகிறதா?
நன்று...
ஹாஹா..நல்ல கேள்வி..
நீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி மது!
குறுந்தொகைப் பாடலுக்கான விளக்கம் அருமை. எளிய உரை,விளக்கம், சொற்பொருள் என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலசி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுடைய பாட்டும் மிக அருமை. பாராட்டுக்கள் சகோதரி.
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.
நீக்குmikavum arumai puthiya kavithai super.vazhthukkalma
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க கீதா!
நீக்குசிறப்பானதோர் பாடல். ரசித்தேன் கிரேஸ்....
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங்கட்!
நீக்குமிகவும் ரசித்தேன் தோழி. பகிர்வுக்கு நன்றி! :)
பதிலளிநீக்குபழையப் பதிவுகளையும் தேடித் படிப்பது கண்டு மகிழ்ச்சி தோழி, மனம் நிறைந்த நன்றி :)
நீக்கு