காதலில் நானும் நீயும்

காதலில்
நானும் நீயும்
காற்று
நம் சுவாசமாய் மட்டும்

காதலில்
நானும் நீயும்

காலம்
நம் அன்பை பதித்தோடும்

காதலில்
நானும் நீயும்
காட்சியொன்றும்
நம் கவனம் கவராமல்

காதலில்
நானும் நீயும்
காதலே
நம் வாழ்வாய் சகலமாய்

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி..

    காதலின் சிறப்பு..... சிறப்புத்தான்...
    வாழ்த்துக்கள்.
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. காதலில்
    நீயும் நானும்
    கவிதையால்
    நீயாய் நானும் !
    அருமை கிராஸ் !!

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? இன்னும் எழுதினால் நீண்டதாகிவிடுமோ என்று நினைத்துவிட்டேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி மது, முடிந்தால் இன்னும் சேர்த்துவிடுகிறேன்!

      நீக்கு
  4. காதலில் வாழ்க்கை இனிக்கும்.
    காதல் இல்வாழ்க்கை இன்னும் சிறக்கும்
    காதல் இல்(லா) வாழ்க்கையோ கசக்கும்.
    காதலோடு கவிதையும் இணைய காலமெல்லாம் சுவைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவி அருமை தோழி..காதலும் கவியும் சேர்ந்து வாழ்வு சுவைக்கத்தான் செய்யும்...அருமை!
      நன்றி தோழி!

      நீக்கு
  5. உன்னதமான காதலின் வெளிப்படையான உணர்வு இங்கே கவிதையானது
    அருமை !வாழ்த்துக்கள் இன்பக் கவிதைகள் இனிதே தொடரட்டும் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பொங்குக பொங்கல்

  பொங்குக இனிய பொங்கல்       பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல்       போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல்       படிப்பினில் அழுத்...