ஐங்குறுநூறு 21 - மையிட்டக் கண் வருந்துவது ஏன்?

தன் மீது கொண்ட அன்பால் தன் தோழி வருந்துவதைக் கண்ட தலைவி தோழியிடம் அப்படி வருந்துவது ஏனோ என்று கேட்கிறாள். தோழி ஏன் வருந்துகிறாள்? தலைவி ஏன் வருந்தவேண்டாம் என்று சொல்கிறாள்? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...


ஐங்குறுநூறு 21, பாடியவர் ஓரம்போகியார்,  
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது

"முள்ளி நீடிய முது நீர் அடை கரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்
உண் கண் பசப்பது எவன் கொல் அன்னாய்"

எளிய உரை: முட்செடிகள் வளர்ந்திருக்கும் குளத்தின் மணல் நிறைந்த கரைகளில் இருக்கும் புள்ளிகளுடைய நண்டுகள் அல்லியின் தண்டுகளை அறுக்கும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவன் தெளிவாகச் சொல்லியும் உன் மையிட்ட கண்கள் நிறமிழந்து கவலை கொள்வது ஏன் தோழி?

விளக்கம்: தலைவியைப் பிரிந்துவிடுவானோ என்று எண்ணி ஐயமுற்ற தோழியிடம் தலைவன் அவ்வாறு தலைவியைப் பிரிய மாட்டேன் என்று தெளிவாக விளக்கிச்சொல்லியிருந்தான். இருப்பினும் அவன் மீண்டும் வருவானா என்று கவலை கொண்டிருந்த தோழியிடம் தலைவி, "அவர் விளக்கிச் சொல்லியும் நீ ஏன் சந்தேகப்பட்டுக் கவலைப்படுகிறாய்?" என்று கேட்கிறாள். நண்டு அல்லித்தண்டை அறுப்பது போலத் தலைவன் தன்னுறவை அறுக்க மாட்டான் என்றுக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
தலைவி தோழியை அன்னாய் என்று அழைக்கிறாள். 
'களவன் பத்து' என்றழைக்கப்படும் 21 முதல் 30 வரையிலானப் பாடல்களில் களவன்(நண்டு) தலைவனின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்பத்தில் தலைவியும் தோழியும் ஒருவரையொருவர் அன்னாய் என்று அழைப்பது இயல்பாகக் காணப்படுகிறது. அன்னாய் என்பது தாயையும் செவிலித்தாயையும் குறிப்பதாகப் பெரும்பாலான பாடல்களில் இடம்பெற்றிருக்கும்.

சொற்பொருள்: முள்ளி - முட்செடி, நீடிய - வளர்ந்த, முது நீர் - குளம் அல்லது ஆறு, அடை கரை - மணல் நிறைந்த கரை, புள்ளிக் கள்வன் - புள்ளிகளையுடைய நண்டு(கள்வன் - நண்டு), ஆம்பல் அறுக்கும் - அல்லிச் செடியை அறுக்கும், தண் துறை - குளிர்ந்த நீர்நிலை, ஊரன் - ஊரைச் சேர்ந்தவன், தெளிப்பவும் - தெளிவாக ஐயம் நீங்கச் சொல்லியும், உண் கண் - மையுண்ட கண், பசப்பது - ஒளி இழப்பது, எவன் கொல் அன்னாய் - ஏன் தோழி 

என் பாடல்:
"முட்செடிகள் வளர்ந்த மணல்மிகு கரையில்
புள்ளியுடைய நண்டு ஆம்பல் அறுக்கும்
குளிர்ந்த நீர்நிலை ஊரன் தெளிவுபடுத்தியும்
உன் மையிட்டக் கண்கள் வருந்துவது ஏன் தோழி?"
 

22 கருத்துகள்:

  1. கலக்கல் கிரேஸ். அருமையான விளக்கம். உங்க தயவினால் நானும் ஐங்குறுநூறு படிக்கிறேன் :). நன்றிகள் பல.. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    பாடலும் விளக்க உரையும் சிறப்பாக உள்ளது....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்! உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அன்னாய் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...

    ஞாபகம் வந்த குறள் - அல்ல... இந்த முறை பாடல்...

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி... (2)
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி...?
    காரணம் ஏன் தோழி...? ஆஆ ஆஆஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...!

    இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி...?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி...?
    காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ....

    மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி...
    மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி...
    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
    மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி...
    மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ....

    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி...
    கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி...?
    இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்...
    தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்...!
    மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.தனபாலன்!
      சோகப்பாடலாக இருந்தாலும் இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்..
      //மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி.// இவ்வரிக்கு "பிரியேன் என்றேப் பிரிந்தான் அன்றோ
      பொருந்திய மலர்போன்ற என்கண் அழ" (ஐங்குறுநூறு 18) என்ற என் பாடலும் பொருந்துகிறது அல்லவா? பகிர்ந்ததற்கு உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  5. வணக்கம்...

    எல்லா பாடல்களிலும் தலைவிதான் வருந்துவாள் ஆனால் இந்த பாடலில் தோழி வருந்தி தலைவி ஆறுதல் கூறுவது போல அமைந்த பாடலுக்கு சிறப்பான விளக்கம்....

    வார்ப்பிலக்கியம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெற்றிவேல்!
      ஆமாம், இந்த பத்தில் இன்னும் சில பாடல்கள் இப்படி அமைந்துள்ளன.
      உங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  6. தமிழ் பிடிக்கும். ஆனா, இலக்கண தமிழில் எழுத வராது எனக்கு. நல்ல பாடல். அதற்கான விளக்கமும் சூப்பர். பகிர்வுக்கு நன்றி கிரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கணத் தமிழோ..இலக்கியத் தமிழோ..இனிய தமிழில் நன்றாக எழுதுகிறீர்களே...
      உங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ராஜி!

      நீக்கு
  7. அந்த காலத்திற்கேற்ற எளிய உதாரணம் ரசிக்க வைக்கிறது !

    குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு ......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
    பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பகவான்ஜி.
      உங்கள் பதிவைப் படித்துவந்தேன்..பகிர்ந்ததற்கு நன்றி!

      நீக்கு
  8. வயது வித்தியாசம் பார்க்காமல் அன்பின் காரணமாக எந்தப் பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் தமிழ்மரபு தோழியரையே அன்னாய் என்று அழைக்கத் தூண்டியிருக்கிறது! என்ன ஒரு உயர்ந்த பாசம்! உங்கள் விளக்கமும் விளக்கமாக வந்த கவிதைபோலும் வரிகளும் (நாலுவரிக் கவிதைக்கு நாலுவரி உரை!) அருமை. நண்டு போலும் பலவற்றை உ தாரணமாகச் சொல்லிப் புரியவைக்கும் செய்யுள் மரபு. இறைச்சி என்று இதைத் தனியாகவே விளக்குவார்களம்மா! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா, உயர்ந்த பாசம்தான். உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி! 'இறைச்சி' என்பதை அறிந்துகொண்டேன்..நன்றி ஐயா!

      நீக்கு
  9. போங்க கிரேஸ் இவ்ளோ அருமையா எழுதின ஒவ்வொரு முறையும்
    விதவிதமாய் புகழ நான் எவ்வளோ தான் யோசிக்கிறது!
    தேர்ந்தெடுத்த பாடலும், விளக்கமும், உங்க கவிதையும் சொல்லிட்டே போலாம் அவ்ளோ சூப்பர் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி மைதிலி. உங்கள் அன்பும் தோழமையும் கிடைத்திருக்கிறதே..புகழ் எல்லாம் எதற்கு?

      நீக்கு
    2. நானும் மைதிலியின் கருத்தை வழிமொழிகிறேன்... அடுத்த பதிவில் பாராட்ட என்ன என்ன சொற்கள் சங்க தமிழில் உள்ளன என்பதை பட்டியலிடுங்க.. எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் :)

      நீக்கு
  10. நண்டு ஆம்பற்கொடியை அறுக்கும் ஊரவன் என்பதாலேயே தன்னுறவையும் எண்ணி மருகிறாள் போலும் தலைவி! அழகான பாடலும் அதற்கான எளிய பாடல் விளக்கமும் மனம் தொட்டன. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான பணி தொடரட்டும்......

    நேற்று கலித்தொகை பற்றிய புத்தகம் பார்த்தேன். முதல் சில பக்கங்கள் பார்த்ததும் வாங்கத் தோன்றியது! ஆனாலும் முழுதும் படிப்பது சாத்தியமில்லை என்று தோன்றவே வைத்து விட்டேன்!.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங்கட்.
      கலித்தொகையும் அகம் பற்றிய பாடல்கள்..ஐங்குறுநூறு போலவே ஒவ்வொரு திணைக்கும் பாடல்கள் இருக்கும்..உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள்! முயற்சித்துப் பாருங்கள்..

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...