வினையோ பெயரோ
உயிரும் மெய்யும் கண்கட்ட
எதுகையும் மோனையும் ஒளிய
சொற்களைப் புரட்டித் தேடுகிறேன்
வினையோ பெயரோ
நிறையோ நேரோ
எதுவும் சேராமல்
என்கவிச் சோலை வறண்டதோ?
விண்மீன்களைக் கண்டு
விண்மீன்களைக் கண்டு
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்
வெண்டைக்காய் கைக்குட்டை - கைவினை

வெண் முத்துடைப் பெட்டியாம்
பச்சை நிறமாம்
பெண்விரல் ஒத்ததாம்
கணக்கு நன்றாய் வருமாம்
காண்பீர் நண்பரே
கைக்குட்டை வந்ததே எனக்கு
என் ஐந்து வயது மகனுடன் செய்தது..அவன் கால்பங்கு செய்துவிட்டு ஓடிவிட்டான்..மீதியை நான் முடித்தேன். பாப்ரிக் பெயிண்ட் பயன்படுத்தினேன். 24 மணிநேரம் காயவிட்டபின் பின்புறம் அயர்ன் செய்ய வேண்டும்.
பள்ளிக்குக் கொண்டுசெல்கிறானாம், ஓரம் அடிக்கவேண்டும்.
இன்னும் சில காகிதத்தில்.....
![]() |
வெங்காய அச்சுப்படம் |
![]() |
வெங்காயம் மற்றும் விரல் அச்சுப்படம் |
ஐங்குறுநூறு 21 - மையிட்டக் கண் வருந்துவது ஏன்?
தன் மீது கொண்ட அன்பால் தன் தோழி வருந்துவதைக் கண்ட தலைவி தோழியிடம் அப்படி வருந்துவது ஏனோ என்று கேட்கிறாள். தோழி ஏன் வருந்துகிறாள்? தலைவி ஏன் வருந்தவேண்டாம் என்று சொல்கிறாள்? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...
ஐங்குறுநூறு 19 - மழை நனைந்த மலராய்
பாடல் தலைவியின் கண், மழை நனைந்த மலர்களைப் போல குளிர்நீர் உகுக்கிறது என்கிறாளே...ஏன் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...